உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் கோலி சோடா புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்

சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் கோலி சோடா புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்

புதுடில்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்தியாவில் பன்னாட்டு குளிர்பானங்களின் வருகையால், பாரம்பரியமிக்க கோலி சோடாவின் தேவை குறைந்து, அதன் சந்தை கிட்டத்தட்ட மறைந்தே போனது. சமீபத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, கோலி சோடாவுக்கு உள்நாட்டில் மீண்டும் சந்தை உருவானது.இந்நிலையில், தற்போது, அதே கோலி சோடா, 'கோலி பாப் சோடா' என்ற பெயரில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.சோதனை அடிப்படையில், இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில், நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த பிப்., 4ம் தேதி, ஏ.பி.இ.டி.ஏ., எனப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையம், சர்வதேச சந்தையில், கோலி பாப் சோடாவை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது.'பேர் எக்ஸ்போர்ட் இந்தியா' உடன் இணைந்து, வளைகுடா நாடுகளில் உள்ள லுாலுா ஹைபர் மார்க்கெட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கோலி பாப் சோடாவுக்கு, அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.இதே போல், பிரிட்டனில் கோலி பாப் சோடா, கலாசார அடையாளமாக மாறி வருகிறது. பாரம்பரிய இந்திய பானத்தை புதுமையான பெயரில் கொண்டு வந்திருப்பது, அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.கோலி சோடா மட்டுமின்றி, மிசோரமில் இருந்து அந்துாரியம் மலர்கள் சிங்கப்பூருக்கும், புவிசார் குறியீடு பெற்ற முசாபர்நகர் வெல்லத்துக்கு பங்களாதேஷிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, ஏ.பி.இ.டி.ஏ., தெரிவித்துள்ளது.

கோலி சோடா பின்னணி

கடந்த 1924ம் ஆண்டு வேலுாரைச் சேர்ந்த கண்ணுசாமி முதலியார் என்பவர், கோலி சோடாவை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இதற்காக, ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில்களை அவர் இறக்குமதி செய்தார். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சிறிய பெட்டிக்கடைகளில் குளிர்பானம் என்றாலே கோலி சோடா என்ற அளவில், வெளியூர், பிற மாநிலங்களுக்கும் பரவி, இந்தியாவில் உலகமயமாக்கல் நடைமுறைக்கு வரும் வரை, கோலி சோடாவுக்கு மவுசு இருந்தது.

கோலி சோடா சந்தை

(2024 நிலவரம்) மொத்த சந்தை மதிப்பு : 3,400 -- 6,800 கோடி ரூபாய் மென் குளிர்பான சந்தையில் 0.51 சதவீதம்ஆண்டு உற்பத்தி : 5 -- 7 கோடி பாட்டில்கள்நுகர்வு : தென் இந்தியா - 60 %வட இந்தியா - 25%மேற்கு இந்தியா - 15%கோலி சோடா உற்பத்தி:தமிழ்நாடு : 40 % ஆலைகள்ஆந்திரா : 20 % ஆலைகள்கர்நாடகா: 15 % ஆலைகள்விற்பனை :சாலையோர வியாபாரிகள் 60 %சிறிய பெட்டிக்கடைகள் 25%ஹோட்டல்/ கபே 10%ஆன்லைன் 5%ஏற்றுமதி:கோலி பாப் சோடாஏற்றுமதி: 5-10 லட்சம் பாட்டில்கள்வருவாய் : 170- -- 340 கோடி ரூபாய்முக்கிய சந்தை : வளைகுடா நாடுகள் (குறிப்பாக லுாலுா ஹைபர்மார்க்கெட்) ஏற்றுமதியில் 50 சதவீதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

morlot
மார் 26, 2025 00:42

Let us boycott american cokes.


hariharan
மார் 25, 2025 16:59

திருவண்ணாமலை பக்கம் உப்பு சோடா மற்றும் பன்னீர் சோடா கிடைக்கும். சோமாசிபடி சோடா ரொம்ப பேமஸ். இன்னைக்கு 30 / 40 ரூபாய்க்கு விக்ர சோடா 50 காசு 1985 இருந்தது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 25, 2025 12:45

மதுரை மாப்பிள்ளை விநாயகர்தான் முதன் முதலாக கோலி சோடாவை அறிமுகம் செய்தார்கள் என்று முன்பு இதே தினமலரில் கட்டுரை வெளியானதே


Ramesh Sargam
மார் 25, 2025 11:58

சிறுவயதில் நாம் கோலி சோடாவைத்தவிர வேறு எதுவும் குடித்ததில்லை.


Varadarajan Nagarajan
மார் 25, 2025 10:33

மாற்றம் ஒன்றே மாறாதது. பாரம்பரியமும், பழமையும் மாறாதது. எனவே நமது பழமையை காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுடன் செய்யும் பொழுது காலத்திற்கும் அது நிலைத்து நிற்கின்றது. இந்நிறுவனம் தற்காலத்திற்கு ஏற்றாற்போல் தேவையான மாற்றங்களுடன் பழைய கோலி சோடாவை அறிமுகம்செய்து வெற்றிகொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்நிறுவனம் பொலவே காளிமார்க் நிறுவனமும் பவண்டோ, பன்னீர் சோடா போன்றவற்றை தகுந்த மாற்றங்களுடன் சந்தைப்படுத்தி வெற்றிநடைபோடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு லாபகரமாக இயங்க வாழ்த்துக்கள்


Apposthalan samlin
மார் 25, 2025 10:29

குண்டு உள்ள சோடாவா குண்டு இல்லாத சோடாவா ?


SUBRAMANIAN P
மார் 25, 2025 13:40

சத்தியமா வெளிநாட்டு கைக்கூலிதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை