உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!

சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீரை நிறுத்தம் முடிவு பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக நாடுகளில் நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான முதன்மையான ஒப்பந்தங்களில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம். தீராத பகை கொண்ட இரண்டு நாடுகள் இடையே 60 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த இந்த ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d45i5sbh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் மூலம், பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று நதிகளில் இருந்து தண்ணீரை இந்தியா பயன்படுத்த முடியும். சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தத்தால் ஏற்படும் சவால்கள் பின்வருமாறு:* ஒரே நாளில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்த முடியாது. கால அவகாசம் தேவைப்படும். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போது தொடங்கலாம்.* தற்போதுள்ள வசதிகளின்படி, மேற்கு நோக்கி செல்லும் நதிகளில் 5 முதல் 10 சதவீத தண்ணீரை தான் நிறுத்த முடியும்.* நீரின் ஓட்டத்தை தடுக்க வேண்டுமெனில் பல அணைகள், கால்வாய்களை அமைத்து இந்திய பகுதிக்குள் தண்ணீரை திருப்ப வேண்டும். இதற்கு சில ஆண்டு ஆகலாம்.* இதன் வாயிலாக, பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர முடியும் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

என்றும் இந்தியன்
ஏப் 25, 2025 16:19

சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் அதில் அதாவது பாகிஸ்தானுக்கு பிரியும் இடத்தில் சர்வ சாதாரணமாக அந்த நதிநீரை சுத்தம் செய்ய முடியாத மாதிரி கெமிக்கல்ஸ், சாயம் கலக்கலாம்.


Velan Iyengaar
ஏப் 25, 2025 15:25

சிந்து நதி நீரை முடக்குவது ஒருபக்கம் ... இன்னொருபக்கம் ... நாட்டு மக்கள் பாதுகாப்பில் முழுக்கவனம் செலுத்துவது ....அது தான் முக்கிய வேலையாக இருக்கவேண்டும் ... எந்த மாநிலத்தில் யார் மீது அமுலாக்கத்துறையை ஏவலாம் ?? வருமானவரித்துறை யார் உறவினர் வீட்டுக்கு சென்றால் யார் கூட்டணிக்கு வருவார் போன்ற யோசனைகளை கொஞ்சநாளுக்காவது தூரவைத்துவிட்டு நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்


Dharmavaan
ஏப் 25, 2025 16:46

திருடனுக்கு போலீசை கண்டால் பயம . இந்த திருடர்களுக்கு அமலாக்கத்துறை பயம


Dharmavaan
ஏப் 25, 2025 16:47

எல்லாம் தெரிந்த மேதாவி கிறுக்கன் புத்தி சொல்ல வந்துவிட்டது


A1Suresh
ஏப் 25, 2025 17:11

காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத்திற்கு கருத்து கேட்டால், இவன் செந்தில்பாலாஜி, துரைமுருகன், கே.என்.நேரு போன்றோரை காப்பாற்றுவது பற்றி கருத்து எழுதுகிறான்.


Bhakt
ஏப் 25, 2025 14:05

கடலில் விட முடியாதா?


kalyan
ஏப் 25, 2025 13:09

காஷ்மீரில், ஒய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும், CRPF , BSF வீரர்களுக்கும் குறைந்த விலையில் அல்லது இலவசமாக நிலப் பட்டா வழங்கி அதில் வீடுகள் கட்ட இதை பண்டைய ஆங்கிலேயர் ஆட்சி நாட்களில் Cantonment என்று அழைத்தார்கள் கடன் வசதியும் வழங்க வேண்டும். அத்தகைய வீரர்களுக்கு தற்காப்புக்காக உரிமம்பெற்ற துப்பாக்கிகளும் வழங்கி அவர்களை குடியேறச் செய்யலாம். சுற்றுலாப் பயணிகள் வரும் பிரதேசங்கள் அருகே இத்தகைய குடியிருப்புகள் அமைய வேண்டும். அப்போது சுற்றுலாப் பகுதிகளில், மக்களில் பலரும் ராணுவ பயிற்சி பெற்ற வீரர்களாக இருப்பார்கள். இத்தகைய தாக்குதல்கள் வரும்போது ஓரளவு மக்களைக் காக்க அவர்கள் முன்வருவார்கள் என்பதால் , தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்த தயங்குவார்கள். இதை முன்னமே மலையாளம் காணொளி ஊடகம் "பத்திரிகை" யில் TG Mohandas என்பவரும், தற்போது "நக்கீரன்" காணொளி ஊடகத்தில் ஒய்வு பெற்ற Lt. Colonel திரு மாயவனாதன் அவர்களும் கூறக்கேட்டு அவர்கள் கருத்து ஒற்றுமையில் வியந்தேன்


Baskar
ஏப் 25, 2025 12:05

இப்பொழுது 5 - 10 சதவீகிதம் திருப்ப முடியும் என்றால் , அதை உடனடியாக திருப்பவும்


Rasheel
ஏப் 25, 2025 11:52

ஜம்மு காஷ்மீரில் மட்டும் 6-7 பெரிய அணைகள் உள்ளது. அவற்றில் நீரை பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் உள்ள அணையில் இருந்து தண்ணீர் இல்லாத அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் பாக்கிஸ்தான் வயிற்றில் அடிக்கலாம். இது தான் நடக்க போகிறது. அணைகளை பெரிய சிமெண்ட் குழாய்கள் மூலம் இணைப்பதன் மூலம் தென்னிந்தியா வரை பயன் பெறலாம். வறட்சியை தடுக்கலாம்.


முருகன்
ஏப் 25, 2025 13:19

மிகப்பெரிய கட்டிட கலை நிபுணர் போல் தெரிகிறது


hariharan
ஏப் 25, 2025 11:39

வெள்ளச்சேதமும் தண்ணீர் தட்டுப்பாடும் எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நமது ஆட்சியாளர்கள் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பர், தேர்தல் வாக்குறுதிகளிலும் வெட்கமில்லாமல் சொல்வார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தஉடன் பதவி சுகத்தை அனுபவிக்கவே 5 ஆண்டுகள் போதாது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நதிகளை ஒன்றிணைக்க முயலலாம். அவ்வாறு செய்வதால் ராஜஸ்தான் போன்ற வரண்ட மாநிலங்களும் பலனடையும். இதற்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள அனைவரின் வாழ்கைதரத்தையும் உயர்த்துவது, வீட்டில் ஒருவருக்கேனும் நிரந்தர பணி, இலவச சுகாதார வசதி, போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஸ்ரீநகரிலும் ஒரு IIT தொடங்குவது, தரமான கல்வி, இந்திய ஆளுமைப் பணிகளுக்கு தரமான இலவச பயிற்சிமையங்கள் அமைப்பது என நல்ல பல திட்டங்களையும் அவர்களுக்கு இந்திய அரசு வழங்கிட வேண்டும். கடுமையான குளிர்காலங்களில் ஏழை மக்களுக்கு அவர்கள் வாழ்வாதாரம் தொய்யாதபடி வேண்டிய உதவிக்கரம் நீட்டுவது என அரசு அர்பணிப்புடன் செய்தால் அவர்களும் சரியான பாதையில் பயணிக்க முடியும், ஒட்டு மொத்த தேசத்திற்கும் நல்லது. பல்வேறு துறைகளிலும் உள்ள தலைசிறந்த வல்லுனர்களின் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி என்னென்ன விஷயங்களில் இந்த மாநிலம் வளர்ச்சியடைய முடியும் என்று ஆராய்ந்து அவர்களின் பரிந்துரையை செயல் படுத்த வேண்டும். நான் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். அங்குள்ள ஏழை மக்கள் அனைவரும் அப்பாவிகள், வறுமையில் வாடுபவர்கள். சுற்றுலா இல்லையென்றால் அவர்கள் நிலைமை நினைத்துப் பார்க்க முடியவில்லை.


A1Suresh
ஏப் 25, 2025 17:10

காஷ்மீரிலும் ஜம்முவிலும் தலா ஒவ்வோரு எஸ்ம்ஸ் மருத்துவமனைகளும் கல்லூரிகளும் கட்டப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளன. ஐஐஎம் ஜம்முவில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. ஐஐடி பற்றி தெரியவில்லை.


Kandasamy Chellappa
ஏப் 25, 2025 22:22

உண்மை


ponssasi
ஏப் 25, 2025 11:35

ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதிகளில் அங்கிருந்து வெளியேறிய பண்டிட்டுகள், மற்றும் இந்துக்கள் பெருமளவு குடியேறவேண்டும். தற்போது அங்குள்ள முஸ்லீம் யார்? அவர்களின் பூவீக்கம் என்ன? அவர்களின் குடியுரிமையை ரத்து செய்யவேண்டும். அங்கிருக்கும் சுமார் 75% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள். கடந்த அரசுகள் வாக்கு வங்கிக்காக கண்டும் காணாமல் இன்று அங்கு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள்.


ramesh
ஏப் 25, 2025 10:16

சிந்துநதி தண்ணீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டப்போவது நல்ல விஷயம் தான் .ஆனால் இதற்கு எதிர்மறையாக பிரம்மபுத்ரா நதியை மறிக்கும் வேலையில் சைனாவும் ஈடுபடும் நிலை உருவாகும் . ஆனால் சிந்துநதி அல்லது பிரம்மபுத்ரா நதியை மறித்தால் இந்தியா பாக்கிஸ்தான், இந்தியா சைனா போர் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் அது நல்லதற்கு அல்ல


Barakat Ali
ஏப் 25, 2025 10:40

நிலைமை புரியாமல் எழுதப்பட்ட கருத்து .... பிரம்மபுத்ரா நதி தடுக்கப்பட்டால் சீனாவுக்கே அது ஆபத்தாய் முடியும் .... இது போன்ற பல வேலைகளை உள்நாட்டிலேயே செய்து பெருவெள்ளத்தால் ஏற்கனவே அவதிப்பட்டு வருகிறார்கள் .... இன்று சீனாவுக்கு அடிமையாக மாறிவிட்ட பங்களாதேசும் பிரம்மபுத்ரா நதியால் பலனடைகிறது ....


ஆரூர் ரங்
ஏப் 25, 2025 10:49

சீனாவுடன் நமக்கு பிரம்மபுத்திரா நதி நீர் ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்பட்டதாக செய்திகள் இல்லை. அது போல இந்திய சீன எல்லைவரையறை ஒப்பந்தமும் கிடையாது. McMahon LINE என்பது கூட இரு நாடுகளும் முழுமையாக ஏற்றுக் கொண்ட தில்லை. சீனா பிரம்மபுத்திரா நதியில் பெரும் அணையைக் கட்டி வருகிறது. நீரைத் தடுத்தால் சீனாவிடம் பெரும் கடன் வாங்கியுள்ள வங்கதேசமும் பாதிக்கப்படும் என்பதால் சீனா அதை செய்ய வாய்ப்பில்லை.


guna
ஏப் 25, 2025 11:40

வற்றாத ஜீவநதி டாஸ்மாக் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை ரமேஷ்....


ramesh
ஏப் 25, 2025 11:44

உண்மை தான் நானும் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆனால் சிந்து நதியை மரிக்கும் போதும் நண்பர் சொல்லுவது போல பிரம்மபுத்ரா நதியை மரிக்கும் போதும் ஏற்படும் விளைவுகளை போன்றே ஏற்படும். அணை கட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல உயரத்தை அதிகரிக்கும் பொது அருகில் உள்ள பல்லாயிர கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்படும் . எனவே அவர்கள்க்கு மாற்று இடம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் ஆற்றை இந்தியாவுக்குள் திருப்பி விடும் போது லட்சக்கணக்கான வீடு நிலங்களை கையக படுத்தவேண்டும் அதன்பிறகே ஆற்றை நாட்டுக்குள் திருப்பி விட முடியும் .அதை செய்து முடித்தால் இந்திய மக்கள் பலன் அடைவர் . ஆனால் அதை செய்து முடிக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம் . நம் நாட்டில் மெட்ரோ பாலம் போட கூட 7 அல்லது 8 ஆண்டுகள் ஆகிறது


Rasheel
ஏப் 25, 2025 11:47

பாக்கிஸ்தான் ஒரு பிச்சை எடுக்கும் நாடு. பங்களாதேஷும் கிட்டத்தட்ட அந்த நிலைமை தான். இந்தியாவின் சீன இறக்குமதி 1 லக்ஷம் கோடி அமெரிக்கா டாலர்கள். அதை இந்தியா நிறுத்தினால், சீனாவின் நிலைமை பரிதாபம். அதை புரிந்து எழுதுவது நல்லது. அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து சீனாவின் மீது வியாபார போரை தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னால் foxcon நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்த ஆப்பிள் போன்கள் பல ஆயிரம் கோடி அமெரிக்கா டாலர்கள். இவை அனைத்தும் 5 வருடங்களுக்கு முன்னால் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. இப்போது இந்தியாவில்.


மொட்டை தாசன்...
ஏப் 25, 2025 09:54

போர்புரிவதைவிட, அந்த செலவில் ஆற்று நீரை விரைவில் இந்தியாவுக்குள் திருப்ப வேண்டும், இதை நிறைவேற்றினால் அவர்கள் தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்படும். தண்ணீருக்கு அலையும் நிலையை விட கொடுமையானது வேறுதுவுமில்லை. தண்ணீருக்கு நம்மிடம் கையேந்தினால் தானாக வழிக்கு வந்துவிடுவார்கள்.


புதிய வீடியோ