உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும்: தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலன்கள் நுகர்வோருக்கு செல்ல வேண்டும்: தொழில்துறையினரிடம் பியூஷ் கோயல் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : '' ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தத்தின் பலன்கள் நுகர்வோர்களை சென்றடைய வேண்டும்'', என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hj0nxqp5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பியூஷ் கோயல் பேசியதாவது: ஜிஎஸ்டியில் நேற்று சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு இது எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தும். மேலும் விவசாயம் முதல் சிறுகுறுதொழில்துறையிலும் தாக்கத்தை உண்டாக்கும். இதனால் நாட்டில் உள்ள ஒவ்வொரு நுகர்வோரும், தொழில்துறையினரும் பயன்பெற வேண்டும்.ஜிஎஸ்டி சீர்திருத்தம் திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கை. 2047 ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்ற பயணத்தில் இது வரும் நாட்களில் முக்கிய பங்காற்றும். இந்த சீர்திருத்தத்தால் ஏற்படும் பலன்களை தொழில்துறையினர் மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராஜா
செப் 05, 2025 08:05

வரி என்ற பெயரில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு சொந்த பந்தங்களுக்கு மட்டுமே பணம் பலன் தந்தது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை,இனி மேலும் குறையும் என்று இலவு காத்த கிளியாக இருக்கும் மக்களுக்கு தெரியும் இந்த நாடகம் இந்தியா ஆட்சியாளர்களே. இதற்கு இடையில் 21000 நாடகம் வேறு


Rajan A
செப் 04, 2025 21:09

வலி உறுத்தல். முதல்ல பெட்ரோல், பத்திரப்பதிவு மற்றும் சாராயத்தை ஜிஎஸ்டில கொண்டு வாங்க. கான் கட்சி கொடுக்கு பிடுங்கப்படும்


Venugopal S
செப் 04, 2025 21:02

நீங்கள் முதலில் குறைந்த விலைக்கு வாங்கும் ரஷ்ய பெட்ரோலின் பலனை மக்களுக்கு கொடுங்கள், அப்புறம் ஜி எஸ் டி வரி குறைப்பு பயனை மக்களுக்கு கொடுப்பது பற்றி கவலைப்படலாம்!


Rameshmoorthy
செப் 04, 2025 19:00

Government should monitor if there is any anti profiteering and reduction in MRP


VENKATASUBRAMANIAN
செப் 04, 2025 18:35

இதை அரசு உறுதி படுத்தவேண்டும். எதையாவது காரணம் சொல்லி விலையை குறைக்க மாட்டார்கள். இப்படித்தான் பெட்ரோல் விலை குறைந்த போது கதை சொன்னார்கள்.


Narayanan Muthu
செப் 04, 2025 18:17

வியாபாரிகள் ஏற்கனவே கொள்முதல் செய்து இருப்பில் வைத்திருக்கும் சரக்குகளுக்கு வரிச்சலுகை எப்படிக்கையாளப்படும். வரிக்குறைப்பின் பயன் பொது மக்களுக்கு சென்று சேர்வதை அரசு எப்படி கண்காணிக்கும்.


Varadarajan Nagarajan
செப் 04, 2025 18:09

இந்த ஜி எஸ் டி வரிகுறைப்பால் உள்ள பலன்களை உற்பத்தியாளர்கள் எடுத்துக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதிசெய்யவேண்டும். எப்படியும் கூடியவிரைவில் உற்பத்தியாளர்கள் விற்பனை விலையை ஏற்றிவிட்டு மறைமுகமாக இந்த பலனை எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.


முதல் தமிழன்
செப் 04, 2025 16:58

மஃரிப் விலையில் அரசு தலையிட்டு கட்டு படுத்தாத வரை பில்லிங் அமௌன்ட் அப்படியேதான் இருக்கும். வரி வித்தியாசம் கடைக்காரங்களுக்குத்தான். மக்களுக்கு எந்த பயனும் இருக்காது.


Rajan A
செப் 04, 2025 21:11

முதல் தமிழன்னா வெங்கயாத்துக்கு முன்னாடியா


Ramalingam Shanmugam
செப் 04, 2025 16:54

all the items are selling on mrp rate traders will calculate lower rate and pay benefits will come after some time not immediately.


முக்கிய வீடியோ