நியூசி.,க்கு எதிரான 2வது டெஸ்ட்: 156 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி: சான்ட்னர் 7 விக்., சாய்த்தார்
புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட், முதல் இன்னிங்சில் இந்திய அணி 156 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. நியூசி., வீரர் சான்ட்னர் 7 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று புனேயில் துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சுழல் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 7 விக்., அஷ்வின் 3 விக்., வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் 'டக்' அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 16/1 ரன் எடுத்து, 243 ரன் பின் தங்கி இருந்தது.