உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கம் கடத்த உதவிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

தங்கம் கடத்த உதவிய இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

திருவனந்தபுரம்:தங்கம் கடத்த உதவிய சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வருவாய் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்திய போது, சுங்கத்துறை இன்ஸ் பெக்டர் அனீஷ் அவர்களுக்கு உதவியது தெரியவந்தது. தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து, தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !