உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

நகராட்சிகளுக்கு பதில் நிதியை அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்குங்கள்; தெரு நாய் விவகாரத்தில் சசிதரூர் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு பதிலாக நம்பகமான விலங்கு நல அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்து உள்ளார்.தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதேப்போல், காங்கிரஸ் எம்பி சசி தரூர், டில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து சசி தரூர் கூறியதாவது: ஒவ்வொரு நகரத்திலும் உள்ள சாதாரண குடிமக்களைப் பாதிக்கும் பிரச்னைக்கு இது ஒரு சிந்தனைமிக்க பதில். நாய்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்போது மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், நமது அமைப்பில் உள்ள குறைபாடு வளங்களின் பற்றாக்குறை அல்ல, மாறாக நிதி வழங்கப்பட்டிருந்தாலும் கூட, தெருநாய்களைச் சுற்றி வளைத்து கருத்தடை செய்யும் பணியைச் செய்ய நகராட்சிகள் விருப்பமின்மை அல்லது இயலாமை என்பதை யாரும் குறிப்பிடவில்லை.இந்த நிதி உண்மையில் தேவைப்படும் இடங்களில் செலவிடப்படுவதில்லை. தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.நாய் மேலாண்மைக்கான நிதியை நகராட்சிகளுக்கு பதிலாக நம்பகமான விலங்கு நலஅமைப்புகளுக்கு வழங்க வேண்டும். இவர்கள் திட்டத்தை நன்கு செயல்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெகதீசன்
ஆக 14, 2025 00:32

ஆமாம். நகராட்சியிடம் கொடுத்தால் பணம் கொள்ளை போகும். ஒரு நாயை கூட அப்புரப்படுத்த மாட்டார்கள்.


ManiMurugan Murugan
ஆக 13, 2025 22:42

நகராட்சி பணியாளர்கள் நிலையை யே அவ்வாறு தான் மாறிக் கொண்டுள்ளது தமிழகத்தில் இதில் நகராட்சி நிதியைக் கொடுக்க வேண்டுமா நாட்டை யே கொடுத்து விடுவார்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி


SUBBU,MADURAI
ஆக 13, 2025 22:07

காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் தகுதி இந்த சசிதரூருக்கு மட்டுமே உண்டு கார்கேயை காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு நீக்கி இந்த சசிதரூரை தலைவராக நியமிக்க வேண்டும்.


புதிய வீடியோ