உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரத்தன் டாடாவுக்கு தீவிர சிகிச்சை!

ரத்தன் டாடாவுக்கு தீவிர சிகிச்சை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று டாடா சன்ஸ் குழுமம். இக்குழுமத்தின் தலைவராக இருந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மறுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், '' எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான வதந்தி குறித்து நான் அறிவேன். அது முற்றிலும் ஆதாரமற்றவை என அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். கவலை கொள்ள வேண்டாம். நான் சிறந்த மன நிலையுடன் உள்ளேன். எனது வயது காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் எனக்கூறப்படுகிறது. இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.டாடா குழுமத்தின் தலைவராக அவர் 1991 முதல் 2012 வரை இருந்தார். 1996 ல் டாடா டெலிசர்வீசஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை துவக்கினார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rajendra Kumar
அக் 09, 2024 23:18

ஐயா தங்களைபோன்ற நல்ல மனிதர்கள் பல்லாண்டு வாழவேண்டும்.


Amar Akbar Antony
அக் 09, 2024 23:08

மனிதருள் மாணிக்கம் இவரின் கருணையால் வாழ்ந்த வாழும் குடும்பங்கள் இலட்சங்களை தாண்டும் நமக்கு இறைவன் கருணைகாட்டி டாடா அவர்களின் உடல்நலம் மேம்பட செய்யட்டும் நாம் அதற்கு பிரார்த்திப்போம்


Mohammad ali
அக் 09, 2024 22:29

தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் மற்ற தொழில் அதிபர்களை போல் சேர்த்து வைத்து இருந்தால் இவரே இன்று உலகின் முதல் பணக்காரர். மிகச்சிறந்த கொடையாளி.


S.Sivan
அக் 09, 2024 22:24

விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்போம், நல்ல மனிதர்


Ramesh Sargam
அக் 09, 2024 21:54

சீக்கிரம் குணமடைய கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.


Kalyanaraman
அக் 09, 2024 21:54

இறைவனருளால் விரைவில் நலத்துடன் வீடு திரும்பட்டும்.


vijay
அக் 09, 2024 21:30

மீண்டு, மீண்டும் மக்கள் சேவை செய்ய வாங்க.


theruvasagan
அக் 09, 2024 21:29

கடவுள் அருளால் சீக்கிரம் நலமுடன் எழுந்து வாருங்கள்.


Chola
அக் 09, 2024 21:19

Get Well Soon Sir...


Rajan
அக் 09, 2024 21:11

விரைவில் குணமடைய வேண்டும்


A Viswanathan
அக் 09, 2024 22:30

விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை