தேசியம் பேட்டி
விமானத்தை விட்டிருக்க கூடாது!அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களை கட்டி அனுப்பியது விதிமீறல். அவர்களின் விமானத்தை திருப்பி அனுப்ப அனுமதித்து இருக்கக் கூடாது. இந்திய வான் பரப்புக்குள் நுழைந்த உடன், அவர்களை நம் நாட்டு சட்டப்படி நடத்தியிருக்க வேண்டும்.சஞ்சய் ராவத்ராஜ்யசபா எம்.பி., - சிவசேனா உத்தவ் அணிராபின் ஹுட்டின் உல்டா!ராபின் ஹுட் கதை நம் அனைவருக்கும் தெரியும். அவர் பணக்காரர்களிடம் இருந்து செல்வத்தை கொள்ளையடித்து ஏழைக்கு வழங்குவார். மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அந்த ராபின் ஹுட் கதாபாத்திரத்தின் உல்டா. இந்த அரசு, ஏழைகளிடமிருந்து செல்வத்தை பறித்து பணக்காரர்களுக்கு வழங்குகிறது.அபிஷேக் பானர்ஜிலோக்சபா எம்.பி., - திரிணமுல் காங்கிரஸ்திசைதிருப்பும் ராகுல்!மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் வாக்காளர்கள் பட்டியலில் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். டில்லி சட்டசபை தேர்தலில், அவர் கட்சி ஒரு இடம் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை. அந்த படுதோல்வியை மறைக்க, இந்த திசைதிருப்பும் தந்திரத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.தேவேந்திர பட்னவிஸ்மஹா., முதல்வர், பா.ஜ.,