உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனவெறியுடன் விமர்சனம்: சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்!

இனவெறியுடன் விமர்சனம்: சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிரிக்கெட் போட்டி வர்ணனையின் போது இங்கிலாந்து வீரரை இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது ஆம் ஆத்மி கட்சியில் எம்.பி., ஆக உள்ளார். ஆனாலும் அவர் இன்னும் பழைய தொழிலான கிரிக்கெட்டை முற்றிலும் கைவிட்டு விடவில்லை. தற்போது நடந்து வரும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை பார்த்து ஹர்பஜன் கமென்ட் ஒன்றை கூறினார். பிளாக் டாக்ஸி என்ற அவரது அந்த கமென்ட், சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.லண்டனில் இயக்கப்படும் கருப்பு நிற டாக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் உயர்ந்த நிலையிலேயே இருக்கின்றன என்பது ஹர்பஜனின் கமென்ட்.ரசிகர்கள் பலரும், ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து, மிக மோசமானது என்று விமர்சித்தனர். சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வீரர்கள் அவருடன் இனவெறியுடன் மோசமாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தன. அப்போது ஹர்பஜனுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். இப்போது அதே ஹர்பஜன், இன்னொரு வீரரை பார்த்து இனவெறி சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கமென்ட் கூறியிருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

vijai hindu
மார் 24, 2025 14:33

கிரிக்கெட் விளையாடும் போது இவருடைய சைகை எல்லாம் கேவலமா இருக்கும்


M R Radha
மார் 24, 2025 13:11

மிகுந்த தலைக்கனம் பிடித்த இவனெல்லாம் விளையாட்டுக்கே லாயக்கில்லை. ஸ்ரீசாந்த் விவகாரம் மறந்து போகல. ஆஸ்திரேலியா வீரருடன் வீண் வம்புக்கு போனதையும் மறக்கல.


Ramesh Sargam
மார் 24, 2025 12:56

தேவையில்லா பிரச்சினைகள். வர்ணனையாளர்களுக்கு நாவடக்கம் மிக மிக முக்கியம்.


Ganapathy
மார் 24, 2025 12:46

...நாம் நமது அணியில் வைத்து கொண்டாடுகிறோம்.


naranam
மார் 24, 2025 11:31

ஏற்கெனவே இவனுக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தி !


vns
மார் 24, 2025 11:26

இங்கே ஒரு நாளைக்கு 1 லக்ஷம் தடவைக்கு மேல் ப்ராஹ்மணர்களை இழிவு படுத்தியும் ஹிந்து மக்களை, ஹிந்து பெயர்களை இழிவுபடுத்தியும் பேசுகிறார்கள், கருத்தை பதிவு செய்கிறார்கள் அதுவும் முதல் அமைச்சர் என்ற பட்டத்தை தாங்கியவர்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தாலும் ஒன்றும் நடப்பதில்லை. யாரும் மன்னிப்பு கேட்டதாக சரித்திரம் இல்லை. கவுண்டமணி சினிமாவில் காமெடி என்ற பெயரில் யாரையெல்லாம் இழிவு படுத்திக் கூறியுள்ளார் , "டே அப்பா" தொடங்கி ? தமிழர்களுக்கு யாரையும் இழிவு படுத்தக்கூடாதென்ற முதிர்ச்சி இன்னும் வரவில்லை, எப்பவும் வராது.


A.Kennedy
மார் 24, 2025 11:13

ஹர்பஜன் சிங் எப்போதும் இதே போல் தவறு செய்பவர், மனிதர்களை மதிக்க தெரியாதவர், இது தவறான செயலாகும். வயதுக்கு ஏற்ற பக்குவம் இல்லாதவர்.


MP.K
மார் 24, 2025 10:38

நிறம் மட்டும் நிலைக்குமோ


சமீபத்திய செய்தி