உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

போஸ்ட் ஆபிஸ் வங்கியில் 344 காலியிடங்கள்: அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

புதுடில்லி: இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.இந்திய அஞ்சல் துறையின் கீழ் உள்ள இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்ப கட்டணம் ரூ.750.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Geetha Grace
அக் 15, 2024 03:26

கிடைச்சா வாய்ப்பு நல்லாயிருக்கும் சுகம் பெறுவோம். அனைவரும்.


A. Manjula
அக் 14, 2024 14:54

Thank you sir


A. Manjula
அக் 14, 2024 14:53

DCA TALLY Prime


P. VENKATESH RAJA
அக் 13, 2024 14:23

போஸ்ட் ஆபீஸ் வேலை கிடைப்பது அரிதாக உள்ளது.


சமீபத்திய செய்தி