மேலும் செய்திகள்
மாஜி எம்.எல்.ஏ., உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
14-Nov-2024
ஹாசன், கர்நாடகாவில் போலீஸ் பயிற்சி முடிந்து, ஹாசன் மாவட்ட டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்க சென்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்தார்.பீஹாரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன், 25; மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் வசித்து வந்தார். 2022 - 23 பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், கர்நாடகா கேடரில் தேர்வு செய்யப்பட்டார். பயிற்சி பெற கர்நாடகா வந்திருந்தார்.மைசூரு போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்தார். இதையடுத்து, ஹாசன் மாவட்ட டி.எஸ்.பி.,யாக அவர் நியமிக்கப்பட்டார். நேற்று இவர், பணியில் சேர வேண்டியிருந்தது. இதற்காக, மைசூரில் இருந்து ஹாசனுக்கு பொலீரோ ஜீப்பில் நேற்று முன்தினம் புறப்பட்டார்.ஏட்டு மஞ்சேகவுடா, ஜீப்பை ஓட்டினார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், ஹாசன் - மைசூரு நெடுஞ்சாலையில் கித்தானே எல்லையில் சென்றபோது, ஜீப்பின் டயர் திடீரென வெடித்து, கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹர்ஷவர்தன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏட்டு மஞ்சேகவுடா லேசான காயம்அடைந்து சிகிச்சை பெறுகிறார். ஹாசனின் டி.ஏ.ஆர்., மைதானத்தில், அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. போலீஸ் உயர் அதிகாரிகள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
14-Nov-2024