உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்; இந்தியாவில் எரிபொருள் விலை குறையுமா என எதிர்பார்ப்பு

ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்; இந்தியாவில் எரிபொருள் விலை குறையுமா என எதிர்பார்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தத்தால், நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டது. அதனால், பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டில் சில்லரை எரிபொருள் விலை என்பது கச்சா எண்ணெயை தாண்டி பல காரணிகளை உள்ளடக்கியதாகும். சுத்திகரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள், மாநில வரிகள், மத்திய கலால் வரிகளை சார்ந்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r6at8v19&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய எண்ணெய் நிறுவனங்களை பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கிறதா அல்லது மீண்டும் ஏறுமுகம் காணுகிறதா என்பதை பொறுத்தே மாற்றங்களை மேற்கொள்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது, எரிபொருள் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஈரான் - அமெரிக்கா இடையே தற்போது ஏற்பட்டுள்ளது இடைக்கால ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்புக்கும் நிரந்தர தீர்வை எட்ட 60 நாள் அவகாசம் உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டால், எண்ணெய் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆகையால், நாளை காலையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விடும் என எதிர்பார்க்க முடியாது என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
ஜூன் 19, 2026 04:56

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை. அதுவும் ஜி யின் நண்பர்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்ள ஜி விரும்பமாட்டார்.


guna
ஜூன் 19, 2026 08:26

மணி கூட சிங்கப்பூரில் ஓசியில் தான் பெட்ரோல் வாங்கிறாரோ


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2026 01:19

விலையை இருநூறு ரூபாயாக ஏற்றி இருக்க வேண்டும். ஆனால் மத்தியஅரசு விலையை ஏற்றவே இல்லை. எங்கிருந்து குறைப்பது? வேண்டுமானால் ஐம்பது ரூபாய் ஏற்றலாம்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 18, 2026 22:18

சார் உபி தேர்தலுக்கு முன்னாடி குறைப்பாரு


D Natarajan
ஜூன் 18, 2026 21:49

இன்னும் ஓரிரு மாதங்களுக்கு குறைவதற்கு வாய்ப்பே இல்லை. ஏறியது ஏறியது தான்


Ramesh Sargam
ஜூன் 18, 2026 21:12

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்தியாவில் எரிபொருள் விலை குறையும். ஆனால் குறையாது. எது? இந்த ஹோட்டல் காரர்கள் ஏற்றிய தின்பண்டங்கள் விலை. இன்று சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் டீ ஒன்றின் விலை ரூ. 42. மற்றொரு ஹோட்டலில் ரூ. 36. கேட்டால் காஸ் விலை ஏறிப்போச்சு என்கிறார்கள். குறைந்தால், அவர்கள் குறைக்கவா போகிறார்கள். அப்படிப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை