உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை

சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : மிக சாதாரண வழக்குகளில் கூட விசாரணை நீதிமன்றங்கள் ஜாமினை நிராகரிப்பது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், இவரது ஜாமின் மனுக்களை விசாரணை நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமின் கிடைக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.இதையடுத்து, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது, ஒரு ஜனநாயக நாடு, போலீஸ் அரசைப் போல செயல்படக் கூடாது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், சிறிய வழக்குகளின் ஜாமின் கோரும் மனுக்கள் மிகவும் அரிதாகவே உயர் நீதிமன்றம் வரை வரும். ஆனால் இன்றோ, விசாரணை நீதிமன்ற அளவிலேயே முடிய வேண்டிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருகின்றன. இது, நீதித்துறையின் சுமையை கூட்டுகிறது.மாஜிஸ்திரேட்களால் முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய ஜாமின் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டு மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R.Varadarajan
மார் 19, 2025 17:02

வழக்குகள், குற்ங்களின் தீவிரத்திற்குஏற்றதாக இல்லாமல் பொது இடங்களில் சிறுநீர கழித்த குற்றங்களுக்கும் மாமூலாக இயந்திரம்போல் பதினைந்து நாள் ரிமாண்ட போன்ற மனசாட்சிக்கு விரோதமான தீர்ப்புகள் உடனடியாக முடிவுக்குவர உச்சநிதீமன்றம் கீழமை நீநி மன்றல்களுக்கு சாட்டையடி கொடுக்கவேண்டும். நம்நாட்டில் நீதித்துறை சில இடது சாரிகளின் பிடியில் சிக்கி அப்பாவி மக்கள் துன்பத்திற்கு ஆளாவது காலத்தின்கோலமாக ஆகிவிட்டது சாட்டப்பட்ட குற்றங்களை பொறுத்து கீழமை நீதிமன்றங்கள அவ்வப்போதே ஜாமீன்வழங்கியோ அல்லது வழக்கைத்தள்ளுபடி விடுதலை அளித்தோ வழக்குகளின எண்ணிக்கு குறைய வழி வகை செய்யவேண்டும் இதில அரசியல்காரணங்கள்வேறு நீதித்துறை சீரமைப்பிற்கு உரியது


अप्पावी
மார் 19, 2025 07:48

பத்து ரூவா பெறாத வழக்குகளைக் கூட வாய்தா வழங்கி 10 வरूஷம் இழுத்தடிப்பாங்க.


M S RAGHUNATHAN
மார் 19, 2025 07:18

This judicial tem especially appellant is responsible for this situation. Either they do not take action against district judiciary for the poor judicial knowledge of the district judiciary or they are interested in giving observations in cases involving public figures to sensationalised the case. Have the HC or SC did any research about the quality of persons dispensing justice in Subordinate, High Court or Supreme Court. It is painful to observe, a single judge in HC gives one judgement and immediately a bench in the same HC stays it or overturns it. Only one judgement alone could be correct. Does it not point out that either the first judge is at fault or has not applied law correctly or the Bench Judgement is at fault. The more tragedy is the SC overturns or stays of the HC judgement on the of a hat. Only these judges from district judiciary, HC are ed for higher posts in HC or elevation to SC. Ridiculous to say so . The Chief Justices of HC and SC should review the contrasting judgements and should reprimand the erring judge for his failure to dispense proper justice in Public. Judges are not holy cows and should be accoun for their failures.


Appa V
மார் 19, 2025 01:07

வழக்குகள் ஆண்டாண்டு காலம் முடிவை எட்டாமல் நீட்டிப்பது வேதனை தருவதில்லையா ? ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது கோடை விடுமுறை தசரா விடுமுறை என்று ஆங்கிலேயர் பாணியில் செயல்படுவது வருத்தம் தருவதில்லையா ? ஜாமினில் வந்து முக்கிய துறைகளில் மந்திரியாக இருப்பது வருத்தம் தருவதில்லையா ?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 00:59

இவங்களால வேதனைப்படத்தான் முடியும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை