உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்காளமொழியை வங்கதேச மொழி என்பதா: டில்லி போலீஸ் மீது மம்தா கோபம்

வங்காளமொழியை வங்கதேச மொழி என்பதா: டில்லி போலீஸ் மீது மம்தா கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வங்காள மொழியை வங்கதேச மொழி எனக்குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய டில்லி போலீசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அந்தக்கடிதத்தில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை எனக்குறிப்பிட்டுள்ளனர்.வங்கதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் வங்காள மொழியில் தான் பேசி வருகின்றனர். மேற்கு வங்கத்தின் அலுவல் மொழியும் வங்காள மொழி தான். ஆனால், வங்காள மொழி என போலீசார் குறிப்பிடாமல் வங்கதேச மொழி என டில்லி போலீசார் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீசார் வங்காள மொழியை ' வங்கதேச' மொழி என குறிப்பிடுகின்றனர்.வங்காள மொழி எங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் மொழி. தேசிய கீதம், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி. கோடிக்கணக்கான மக்கள் எழுதிய மற்றும் பேசிய மொழி. இந்திய அரசியலமைப்பால் புனிதப்படுத்தப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மொழி. இப்போது வங்கதேச மொழியாக விவரிக்கப்படுகிறது.இது அவதூறான, அவமானகரமான, தேச விரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது.இது இந்தியா முழுவதும் வங்காளம் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். நம் அனைவரையும் இழிவுபடுத்தும் இந்த வகையான மொழியை அவர்களால் பயன்படுத்தக்கூடாது. இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இதுபோன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்து செய்கிறோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
ஆக 04, 2025 09:15

வட இந்தியர்கள் ஈரானிய மொழியான சமஸ்கிருதமும், பாகிஸ்தான் மொழியான ஹிந்தியும் பேசுபவர்கள்!


ஆரூர் ரங்
ஆக 04, 2025 16:43

தலீவர், கே கே எஸ் எஸ் ஆர், நேரு, வேலூ, சேகர் பாபு வீடுகளில் என்ன மொழி பேசுகிறார்கள்? ராகுல் வீட்டில் லத்தீன்?


Rajasekar Jayaraman
ஆக 04, 2025 08:19

அதெல்லாம் சரிதான் அவர்கள் பெயரைக் கெடுக்க இவர் ஒருவர் போதும்.


Iyer
ஆக 03, 2025 23:12

சுமார் 1 கோடி "போலி வாக்காளர் பெயர்கள்" - மேற்கு வங்க தேர்தல் பட்டியல் இருந்து நீக்கப்படப்போவது நிச்சயம். அப்படி நீக்கப்பட்டபின் - மம்தா 80-90 க்குமேல் சீட்டுகள் ஜெயிக்கமுடியாது இனி மேற்கு வங்கத்திலும் பிஜேபி ஆட்சி அமைவது உறுதி


பேசும் தமிழன்
ஆக 03, 2025 21:25

இப்போது வங்காளத்தில் இருப்பவர்கள்...வங்க தேசத்துக்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள்....நேதாஜி உட்பட அப்போது இருந்த தலைவர்களுக்கு இந்திய தான் உயிர் மூச்சாக இருந்தது.


திகழ்ஓவியன்
ஆக 03, 2025 21:17

இந்த அம்மணி அங்கே இங்கே ஸ்டாலின் இருவரும் மோடிக்கு சிம்ம சொப்பனம் தான்.


vivek
ஆக 04, 2025 07:49

வடகண்ணஸ ஸ்டாலின் ஒண்ணா .....எல்லாரும் சிரிக்கிறாங்க


தினமலரான்
ஆக 03, 2025 21:11

நாங்களும் மொழிப்போர் சொய்வோம்ல.......


sankaranarayanan
ஆக 03, 2025 20:57

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழிபெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவர்கள் தேவை எனக்குறிப்பிட்டுள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது என்றே தெறிய வில்லை ஏனிந்த அம்மா கதறுகிறார் வங்க தேசத்திலும் அதே வங்காள மொழி இருப்பதால் போலீசு அப்படி குறிப்பிட்டுள்ளனர் இதில் தவறு ஒன்றுமே இல்லை


Keshavan.J
ஆக 03, 2025 20:40

இந்த அம்மாவுக்கு பின்னாடி அமர்ந்திருக்கும் ஆளுங்கள பாருங்க. இவனுங்க இல்லாம இந்த அம்மா ஜெயிக்கவே முடியாது.


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2025 20:23

அப்படியே திராவிடியால் கலாச்சாரம் .......... அதாவது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சென்சிடிவ் விஷயத்தை மொழி, இன அரசியலாக திசை திருப்புவது .......


Ramesh Sargam
ஆக 03, 2025 20:22

மீண்டும் மொழிப்பிரச்சினை. ஜாதி பிரச்சினை, மொழிப்பிரச்சினை இது எதுவும் இல்லாமல் இவர்களால் அரசியல் செய்யமுடியாது. என்னமோ போங்க.


முக்கிய வீடியோ