உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிபில் ஸ்கோரால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்: மஹா.,வில் மணமகன் அதிர்ச்சி

சிபில் ஸ்கோரால் கடைசி நேரத்தில் நின்ற திருமணம்: மஹா.,வில் மணமகன் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் மணமகனுக்கு சிபில் ஸ்கோர் போதுமளவிற்கு இல்லாத காரணத்தினால், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு அரங்கேறி உள்ளது.ஜாதகம் பார்த்து, குடும்ப பின்னணியை தெரிந்து கொண்டு திருமணம் நடப்பது நம் நாட்டில் வழக்கம். இதில் ஏதாவது ஒன்று சரியில்லாவிட்டாலும் அல்லது குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்படும் பட்சத்தில் மட்டுமே திருமணம் தடைபடும். ஆனால், இதற்கு நேர்மாறான நிகழ்வு ஒன்று மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது. அம்மாநிலத்தின் முர்திசாப்பூரில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அனைவரும் சம்மதித்துடன் இந்த திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மணமகளின் நெருங்கிய உறவினர் ஒருவர் மணமகனின் சிபில் ஸ்கோரை கேட்டுள்ளார்.அதில், மணமகன் பல கடன் வாங்கி உள்ளதும், நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள நபருக்கு ஏன் தங்கள் குடும்ப பெண்ணை திருமணம் செய்து தர வேண்டும். அவரால் எப்படி, மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்? என உறவினர் கேள்வி எழுப்பினார். இதனை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தங்கள் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.கடைசி நேரத்தில் சிபில் ஸ்கோரால் திருமணம் நின்ற நிகழ்வு மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venugopal d
பிப் 14, 2025 20:08

There is nothing wrong in obtaining loans as long as its valid e.g home loan. But cibil score is based on how properly you are repaying it and managing your finance. If that is poor, it means either the groom has too many loans beyond is repayment limit or hasnt made his repayments on time or really bad spending habits using credit cards.


Swaminathan
பிப் 09, 2025 19:21

மணமகனின் கடன் விவரங்களைப்பற்றி தெரிந்து கொண்டு திருமணம் செய்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு மணமகளின் பெற்றோர்கள் எவ்வளவு கடன் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு காரணம் திருமணம் முடிந்த பிறகு மாப்பிளை மீதும் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மீதும் இந்த கடன் சுமையை ஏற்றுகிறார்கள். இதற்கும் இந்தியாவில் சட்டம் துணை புரியவேண்டும்.


Karthik
பிப் 09, 2025 18:13

சொத்து பத்து இல்லாவிட்டாலும் / சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வருமானமே இன்றி - ஆடம்பர செலவுகள் செய்து மீளாக்கடனில் தவிக்கும்போது அதை சமாளிக்க மணமகள் / குடும்பத்தார் தலைல் கட்ட நினைப்பது சரியல்ல. பணத்தின் அருமையே தெரியாத இவனுக்கு சொந்த பந்தம் / உறவுகளின் அருமை எப்படி தெரியும்?. இவன்போன்றோர்க்கு வாழ்நாளில் திருமணமே கூடாது.திருமணத்தை நிறுத்தியது மிகச் சரியே


kalyan
பிப் 09, 2025 16:16

சென்னையில் உள்ள என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகளின் முதல் திருமணமும், நிச்சயம் செய்த பிறகு வருங்கால மணமகன் மிக கடனாளி மற்றும் குதிரைப்பந்தய மோகத்திற்கு அடிமையானவன் என்று நண்பர்கள் மூலமாக அறிந்து கொண்டதனால், என் நண்பரால் நிறுத்தப்பட்டது. இப்போது வேறு ஒரு நல்ல மணமகனை தேடி கண்டுபிடித்து மகளுக்கு திருமணம் செய்து அதில் பிறந்த பேத்தியுடன் இன்பமாக வாழ்கிறார். இதொன்றும் பொறுப்பான தாய் தந்தையர் செய்வது புதிதல்ல.


krishna
பிப் 09, 2025 14:55

IDHIL ENNA THAVARU ULLADHU.


A.Gomathinayagam
பிப் 09, 2025 14:21

தனி நபர் கடன்கள் கூடி கொண்ட வரும் நிலையில் மணமகள், மணமகனின் நிதி நிலை பற்றிய அறிக்கை கேட்பது இன்று காலத்தின் கட்டாயம்


Kumar Kumzi
பிப் 09, 2025 13:40

நம்பிள் டாஸ்மாக் நாட்டில் சிபில் ஸ்கோர் பற்றி சாராய கடைகளில் தான் கேக்கனும்


Kundalakesi
பிப் 09, 2025 13:35

இருவரும் குடும்ப மருத்துவ வரலாறு, நிதி நிலைமை, சிபில் மதிப்பெண், ரத்த பரிசோதனை முடிவுகளை பரஸ்பரம் பரிமாறிக்கலாம்


Pandi Muni
பிப் 09, 2025 13:30

கந்து வட்டிக்கு ஊரெல்லாம் கடன வாங்கி வச்சிறுக்கவன எப்படி கண்டுபிடிக்கிறது. யாராவது ஐடியா சொல்லுங்களேன்


rajan_subramanian manian
பிப் 09, 2025 11:32

இது ஒரு சரியான முடிவுதான். மாப்பிளைக்கு சொத்து எவ்வளவு, படிப்பு எவ்வளவு, சம்பளம் எவ்வளவு என்று கேட்பது போல பிற்காலத்தில் கடன் எவ்வளவு, அடகு வைத்தது எவ்வளவு, வியாதி எந்த அளவு என்று கேட்க வேண்டியிருக்கும். மணமகளுக்கும் இதே கேள்விகள்தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை