உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்ப் மசோதாவை ஆதரித்ததால் முஸ்லிம் ஓட்டுக்களை இழக்கிறாரா நிதிஷ்? உண்மை நிலவரம் இதோ!

வக்ப் மசோதாவை ஆதரித்ததால் முஸ்லிம் ஓட்டுக்களை இழக்கிறாரா நிதிஷ்? உண்மை நிலவரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: வக்ப் மசோதாவுக்கு ஜக்கிய ஜனதா தளம் ஆதரித்ததால், அந்தக் கட்சியின் 5 முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பீஹார் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்தக் கட்சி முஸ்லிம் ஓட்டுக்களை இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பார்லிமென்டில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், பீஹாரை ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி.,க்கள் ஆதரவு கொடுத்தனர். இதற்கு அதிருப்தி தெரிவித்து ஐக்கிய ஜனதா தளத்தின் முஸ்லிம் எம்.பி.,க்கள் உள்பட 5 முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகினர். விரைவில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முஸ்லிம்களின் ஓட்டுக்கள் நிதிஷ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது குறித்து புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதாவது, பா.ஜ.,வுடன் கூட்டணி மற்றும் பா.ஜ., அல்லாத கூட்டணியில் நிதிஷ்குமாருக்கு முஸ்லிம் ஓட்டுக்கள் எத்தனை சதவிகிதம் விழுந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2014 லோக்சபா தேர்தல் மற்றும் 2015ல் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை எதிர்த்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. 2014ல் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதில், 23.5 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. அதேபோல, 2015 சட்டசபை தேர்தலில் 80 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து 2020 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது 5 சதவீத முஸ்லிம் ஓட்டுக்களையும், 2019 லோக் சபா தேர்தலில் 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. அதேபோல, 2024 லோக்சபா தேர்தலில் 12 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. இது கடந்த 2014 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைவாகும். 2024 லோக்சபா தேர்தலின் போது பீஹாரில் 7.64 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி, 1.75 கோடி (17 சதவீதம்) பேர் முஸ்லிம் மக்கள். அதில், 1.29 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். அதேபோல, 2015 தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 7 முஸ்லிம் வேட்பாளர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர். 2020ம் ஆண்டில் 11 பேர் போட்டியிட்ட நிலையில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார் நிதிஷ்குமார். இதன்மூலம், வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்த நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் முஸ்லிம் ஓட்டுக்கள் எந்தவிதமான பாதகத்தையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை என்று தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
ஏப் 06, 2025 10:05

முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஜெயிக்க இந்து ஓட்டுக்கள் தான் தேவை என்பதை அவர்களும் அறிவார்கள். எனவே ரொம்ப ஆட மாட்டார்கள். மேலும் இந்த சட்டத்தால் அவர்களுக்கு ஏற்படும் நட்டம் என்ன என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. எனவே பாதிப்பு இல்லை என்னதான் தெரிகிறது.


Kasimani Baskaran
ஏப் 06, 2025 07:55

பாகிஸ்தான் பரப்பளவை விட அதிக பரப்பளவு சொத்துக்கள் வக்ப் வாரியத்துக்கு இருக்கிறது - ஆனால் இன்றைய அளவில் பயன்பெறுவது ஏழைக இஸ்லாமியர்கள் அல்லர். புதிய வக்ப் சட்ட மாற்றம் - 2025 ஏழை இஸ்லாமியர்கள் முன்னேற வழிவகுக்கும் - ஆகவே நிதீஸுக்கு வாக்குகள் அதிகரிக்க வாய்ப்பை இது வழங்கியிருக்கிறது.


பேசும் தமிழன்
ஏப் 06, 2025 00:30

அப்படி பார்த்தால்.... இங்கே திமுக கட்சிக்கு.... இந்துக்கள் யாருமே ஓட்டு போட கூடாதே ???


Shekar
ஏப் 06, 2025 09:31

நம்ம ஆளுங்கதான் உப்பு போட்டு சாப்பிடுறதையே கை விட்டாச்சே. புழுத்துப்போன பிரியாணி அந்தக்கடையில் போய் வாங்கி ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் அப்படின்னு சாப்பிட ஆரம்பிச்சாச்சே


சிவம்
ஏப் 05, 2025 23:56

இது போன்ற மத அடிப்படையில் பிரியும் வாக்குகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டுமென்றால், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை கொண்டுவரவேண்டும். ஆனால் மைனாரிட்டி. வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இது ஒரு கசப்பான விஷயம்.


Priyan Vadanad
ஏப் 05, 2025 23:35

தினமலரின் கருத்துக்கள் ரொம்பவும் சரியானவை. நிதிஷ்குமார் அரசியல் கலப்பில்லாத, மாறி மாறி தாவிக்குதிக்காத நடுநிலையாளர்.


Dharmavaan
ஏப் 05, 2025 23:05

விலகியது யார் விவரம் வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 06, 2025 10:15

நல்லா கேக்குறீங்க டீடைலு.... தமிழக மீடியாவால் முடிஞ்சது இவ்ளோதான் .....


MARUTHU PANDIAR
ஏப் 05, 2025 22:01

இங்கு தான் இந்துக்கள் ஒட்டு எங்களுக்கு தேவை இல்லை, அப்படி அவர்கள் ஒட்டு மூலம் எங்களுக்கு வெற்றி தேவை இல்லை என்று எப்புடி தெகிரியமா சொல்றாங்க, ஆனால் "அவர்களை பற்றி அப்படியெல்லாம் சொல்ல முடியுங்களா அப்புடீன்னு கேக்கறாங்க .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை