உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?

புதிய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா?

புதுடில்லி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது உள்ள டி.ஒய்.சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் நவம்பருடன் நிறைவு பெறுகிறது.இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரை, டி.ஒய்.சந்திரசூட் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதற்கான கடிதத்தை சஞ்சீவ் கண்ணாவிடம், சந்திரசூட் நேற்று அளித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். சஞ்சீவ் கண்ணா, புதிய தலைமை நீதிபதியாக வரும் நவ., 10ம் தேதி பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ