உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் கட்டாயம்?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைக்கப்பட்ட போன் நம்பர் கட்டாயம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வாக்காளர் பட்டியலில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பெயர்களை சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட, 'மொபைல் போன்' எண் கட்டாயம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. 'கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன' என, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார். கர்நாடக தேர்தல் அதிகாரி அன்புகுமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதன் விபரம்: கடந்த 2022ல், ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் அதிகாரிக்கு, 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. களத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவற்றில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிந்தது. இதனால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டன. மேலும், போலியாக வந்த விண்ணப்ப படிவங்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷன் சார்பில் ஆலந்த் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தரப்பட்டது. இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், ஆன்லைனில் போலியாக வரும் விண்ணப்பங்களை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ, திருத்தவோ வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் தரப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தேர்தல் கமிஷனின் ஐ.டி., துறை பணியாற்றி வந்ததாகவும், ஆன்லைனில் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கோரும் திருத்தம் தற் போது மேம்படுத்தப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rengaraj
செப் 25, 2025 13:50

ஒரு ஊரில் அல்லது ஒரு தெருவில் ஆதார் எண் இல்லாதவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவு. அப்படி இருப்பின் அவர் பெயரில் வங்கி கணக்கோ , அலைபேசியோ, பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்காதவராகவோ , வாகன ஓட்டுநர் உரிமம் எதுவும் இல்லாதவராகவோ அல்லது அரசாங்க உதவி எதுவும் பெறாதவராகவோ , அல்லது குடும்ப ரேஷன் அட்டை பெறாதவராகவோ இருக்க வேண்டும்.


Iyer
செப் 25, 2025 08:49

சட்டவிரோதமா - ஆவணங்கள் பெற்று குடியேறி உள்ளவர்கள் 15 நாட்களில் சரணடையவேண்டும் இல்லையானால் DETENTION CAMP களில் அடைக்கப்படுவீர்கள் என்று பொது எச்சரிக்கை அளித்தால் எல்லா பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் சரண் அடைவார்கள்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 16:01

சரண் அடைந்தவர்களை என்ன செய்வீர்கள்?அவர்களும் DETENTION CAMP தான்.


D Natarajan
செப் 25, 2025 08:42

இறப்பு சான்றிதழ் வழங்கும்போது ஆதார் எண் நீக்கம் செய்யவேண்டும். ஆதாரோட இணைக்கப்பட்ட வோட்டர் id, ரேஷன் கார்டு, பான் கார்டு கேட்ச் இவைகளல்லாம் தானாகவே நீக்கம் செய்யும்படியாக புதிய நடைமுறை கொண்டு வரவேண்டும்


GMM
செப் 25, 2025 08:09

குடிமகனை அடையாளம் காண ஆதார் எண் மூலம் வாய்ப்பு இல்லை. வாக்குரிமை இந்திய குடிமகனுக்கு மட்டும். வாக்குரிமை வழங்க பிறப்பு, பள்ளி போன்ற மூல ஆவணம் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும். இவை ஒருவருக்கு ஒன்று தான் இருக்கும். வசிப்பிடம் மாறும். ஒருவருக்கு பல முகவரி இருக்கும். விரைவில் குடிமகனை அடையாளம் காண குடியுரிமை அடையாள அட்டை வழங்க வேண்டும்.


GMM
செப் 25, 2025 07:56

ஆதார் பதிவு 2015 ல் வழங்கும் போது பிறந்த நாள், மொபைல் எண், மெயில் வங்கி விவரம் கேட்கப்பட்டு இருந்தது. 4 நாட்களுக்குள் திருத்தம் செய்ய வாய்ப்பு கொடுக்க பட்டது. பின் ஆதார் எண் வழங்கப்பட்டது. ஆதார் பதிவில், ஆதார் அட்டை எண்ணில் மொபைல் எண் மாறுபடலாம். தற்போது ஆதார் மொபைல் எண் மூலம் தான் தொகுதி மாற்றம், திருத்தம், நீக்கம் செய்ய முடியும். வங்கியில் இதே முறை தான். சொந்த மொபைல் இல்லாத நபர் நேரில் அல்லது குடும்ப தலைவர் மொபைல் எண் ஆதார் எண் வங்கி கணக்கு எண் பெற்று திருத்தம், நீக்கம் செய்ய ஆலோசிக்க வேண்டும்.


Barakat Ali
செப் 25, 2025 07:26

ரோஹிங்கியா, பங்களாதேசிகளிடம் ஆதார் இல்லீங்களா? இந்திய சிம்தான் இல்லீங்களா? எல்லாமே இருக்குது ...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 06:58

செப்டம்பர் 22, 2025 வரை யார் வேண்டுமானாலும் எவர் பேரை வேண்டுமானாலும் நீக்கலாம், போன் எண்ணை மாற்றலாம், போலி login உண்டாக்கலாம், ஆயிரக்கணக்கில் எந்த மாநிலத்து வாக்குசாவடியில் உள்ளவர்களின் தரவுகளை மாற்றி, நீக்கலாம். எந்த OTP யும் இல்லாமல். வாக்கு திருட்டு கூட்டம் கையும் களவுமாக பிடிபட்டு ராகுல்காந்தி சவுக்கால் அடித்து கேட்ட போது, அப்படி ஒன்றும் இல்லை என்று கூசாமல் பொய் சொன்ன கூட்டம் இன்று eSign கட்டாயம் என்று வோட்டு திருட்டு கும்பலுக்கு திறந்து வத்திருந்த பின் கதவை மூடி விட்டதாக பிலிம் காட்டுகிறார்கள். இந்த பத்தாண்டில் எத்தனை கோடி வாக்குகளை திருடினார்கள்


Mettai* Tamil
செப் 25, 2025 11:15

அதனால தான் தமிழ்நாட்டில், திமுக மட்டும் ஊழல் பணத்தை கொடுத்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களா?


visu
செப் 25, 2025 11:37

முட் டாள் தனமா இருக்கு போன் எண் இல்லாம நீக்கமுடியாது அப்படியென்றால் நேரில்தான் மாற்றமுடியும் சோதிப்பது மாநில அரசு ஊழி யர்கள் போலி எண் என்றால் கூட அடுத்தவர் பெயரை நீக்க முடியாது


Vasan
செப் 25, 2025 06:39

இந்த உத்தரவு நிலைத்து நிற்க்காது. தொலைபேசியோ அலைபேசியோ இல்லாதவர் வாக்காளர் ஆக முடியாதா?


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 15:59

ஒரு வீட்டிற்கு ஒரு மொபைல் எண்ணாவது கட்டாயம் வேண்டும். தந்தை, தாய் அல்லது கார்டியன் பெயரில் உள்ள மொபைல் எண் பயன்படுத்தலாம்.


அப்பாவி
செப் 25, 2025 05:50

ஆதாரை வெச்சுத்தானே சிம்கார்டே வாங்குறோம்?


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 25, 2025 15:56

பிறந்த பின்னர்தான் பெயர் வைக்கிறோம். அப்புறம் பெயரை வைத்துத்தானே கூப்பிடுகிறோம்? அதுபோலத்தான். ஆதார் பெறும்போது பயோமெட்ரிக் எடுக்கிறார்கள். பின்னர் அதை வைத்து ஃபோன் எண் தருகிறார்கள். இப்போது ஃபோன் எண்ணும் ஆதாரின் ஒரு அங்கமாக மாறிவிடுகிறது. அம்புட்டுத்தான்.


Naga Subramanian
செப் 25, 2025 05:39

அனைத்து ஆதாரங்களும் இருந்தும், என்னது பெயர் வாக்காளர் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொண்டே இருக்கிறேன். எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதுதான் தமிழகம். விண்ணப்பம் செய்பவர் திமுக காரன் இல்லையென்றால், சேர்த்துக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 25, 2025 06:45

உன் அறிவை வியந்து பாராட்டுறேன் உன்னியே மாதிரி இருக்குறவன் வரை ஒன்றியத்திலே பாஜாக்கா தான்


முக்கிய வீடியோ