உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு

11 பேர் உயிரிழந்த நிலையில் தேவையா இந்த கொண்டாட்டம்; ரசிகர்கள் கொந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு கிரிக்கெட் அணியின் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், அதைப்பற்றி கவலைப்படாமல் ஸ்டேடியத்தில் விழா தொடர்ந்து நடத்தியது, பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை தோற்கடித்து பெங்களூரு அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை பெங்களூரு அணி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற கையோடு, பெங்களூரு திரும்பிய வீரர்களை அரசின் சார்பில் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, பெங்களூரு அணி வீரர்கள் சின்னசாமி மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6873a2wm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நிலவியது. இதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு பெங்களூரு மக்களிடம் துணை முதல்வர் சிவகுமார் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால், இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டு, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே களேபரம் ஏற்பட்டுள்ள நிலையிலும், மைதானத்திற்கு உள்ளே திட்டமிட்டபடி, வீரர்களை கவுரவிக்கும் விழாவை கர்நாடகா கிரிக்கெட் சங்கம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் செத்து மடிந்த நிலையிலும், நிகழ்ச்சியை ரத்து செய்யாமல், பெங்களூரு வீரர்கள் வீர உரையாற்றியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மேலும், மக்களின் உயிர் மீது இவ்வளவு தான் அக்கறையா என்று எல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் மீது பொதுமக்கள் ஏராளமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது. இதனையடுத்து பெங்களூரு அணியை விமர்சித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Elango S
ஜூன் 05, 2025 19:11

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் அந்நிய பொருட்களை புறக்கணிக்க மகாத்மா கூறினார் அதே போல கிரிக்கெட்டை இனி மேலாவது புறக்கணிப்பார்களா


A P
ஜூன் 05, 2025 09:43

இந்த கிரிக்கெட் விளையாட்டை தடை செய்ய வேண்டும். அறிஞர் லார்டு மெக்காலே சொன்னது போல, "11 பேர் விளையாடுகிறார்கள், 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள். " இதனால் ஒட்டு மொத்த இந்தியாவின் PRODUCTIVITY கணிசமாக குறைகிறது என்பது கண்கூடு. உடல் நலக்கேடுடன், பண விரயம் வேறு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து, மட்டை ஆட்டத்தைப் பார்த்துப் பார்த்து முட்டை மார்க் வாங்குகிறார்கள். இதில் 1000 ரூல்ஸ் வேறெ. முட்டாள்தனமாக இருக்கிறது. மைதானத்தில் 2 அல்லது 3 பேர் ஆடுவார்களாம். மற்றவனெல்லாம் சும்மா இருப்பார்களாம். கேவலம்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூன் 04, 2025 23:43

ஒரு ipl கோப்பை வாங்கினத்திற்கு எதற்கு இந்த வெற்றி விழா? இந்தியா உலகக்கோப்பை சென்றபோது கூட இவளோ அலப்பறை செய்யவில்லை. கர்நாடக மக்கள் அறிவு கூர்மை கண்டு வியக்கிறேன். 11 வீரர்களை காண 11 பலி.


BHARATH
ஜூன் 05, 2025 10:52

நம்ம ஊர்ல மட்டும் எப்படி கேவலம் ஒரு நடிகனுக்கு பால் ஊத்தறானுங்க.


m.arunachalam
ஜூன் 04, 2025 22:46

கோலியும் , தோனியும் நம்மை சுரண்ட நாம்தான் அனுமதிக்கிறோம் . அதன் பலன் கிடைத்துள்ளது .


R.Hariharasubramanian
ஜூன் 04, 2025 22:42

கிரிக்கெட் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டிய விளையாட்டு - மக்களின் உயிரோடும், நேரத்தோடும் அது விளையாடுவதால் ...


அப்பாவி
ஜூன் 04, 2025 21:43

ரசிகர்கள்.கொந்தளிப்பாம். இவிங்கள மாதிரி மாங்கா மடையர்கள் செஞ்ச வேலைதான் அது.


HoneyBee
ஜூன் 04, 2025 21:26

இந்த போன்ற போட்டிகளை உயர்நீதிமன்றம் தடை செய்ய வேண்டும்... உடனடியாக இந்த வெறிபிடித்த ஆட்டத்தால் எத்தனை இளைஞர்களுடைய அறிவாற்றல்கள் வேஸ்ட் ஆகிறது. ஆக மொத்தத்தில் இந்த வெறி பிடித்த ஆட்டத்தை முதலில் தடை செய்ய வேண்டும்...


ديفيد رافائيل
ஜூன் 04, 2025 21:10

இவனுங்களுக்காக பணம் செலவழித்து ticket வாங்கி போனவனுங்க சாகட்டும். யாருமே இல்லைன்னா கூட winning ceremony பிரமாண்டமா நடத்த தான் செய்வாங்க.


Subramanian Suriyanarayanan
ஜூன் 04, 2025 21:08

மிகச் சரியான கருத்து


thanventh R
ஜூன் 04, 2025 20:56

அரசால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எத்தனை பேர் வருவார்கள் ? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. பாதுகாப்பில் தோல்வி ஏற்பட்டு உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை