உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

ஐ.நா., படை மீது இஸ்ரேல் தாக்குதல்; வீரர்களை அனுப்பிய இந்தியா கவலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து உள்ளது.உலகின் உள்நாட்டு கலவரம் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஐ.நா., பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். அதில் இந்திய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். அதில் சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா., விருது வழங்கி கவுரவித்து உள்ளது. லெபனானில் மட்டும் 600 இந்திய வீரர்கள் அமைதிப்படையில் பணியாற்றுகின்றனர்.ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் ஐ.நா., அமைதிப்படை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக ஐ.நா., கூறியிருந்தது.இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: லெபனானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவது குறித்து கவலைப்படுகிறோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஐ.நா., அமைப்பு மற்றும் அதன் இடங்களை மதிக்க வேண்டும். ஐ.நா., அமைதிப்படையினர் மற்றும் அவர்களின் பணியின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

muthu
அக் 14, 2024 00:13

First of all Why UN forces are at the fighting zone. Not yet clear .


morlot
அக் 12, 2024 18:01

As usual nobody has the courage to criticize the attitude of israel except french président Macron.All the others are coward to attack ly israel s dictator Netanyou. Hope God will punish him like ArielSharon


அப்பாவி
அக் 12, 2024 03:11

இது போருக்கான நேரமில்லை. ஆனா நமக்கு வந்தா தக்காளி சட்னி இல்லை.


N Sasikumar Yadhav
அக் 12, 2024 08:30

சில அந்நியநாட்டு கைக்கூலிகள் பாரதத்தில் சொகுசாக இருந்துக்கொண்டு பாரதத்தை பழி சொல்வதையே பழக்கமாக வைத்து கொண்டிருக்கிறானுங்க ஐநா சபைக்கு அமிதிப்படை அனுப்புவது மோடிஜி ஆட்சியில் கொண்டுவந்ததை போல பேசுகிறானுங்க சிலர் .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 11, 2024 22:39

சணடைன்னா சட்டை கிழியத்தானே செய்யும்.... இதையெல்லாம் பாக்காம தீவிரவாதிகளை களை எடுக்கனும் இந்தியா....நீ செல்லும் பாதை சரியானதே...!!!


தமிழ்வேள்
அக் 11, 2024 21:11

மூர்க்க களவாணி பயங்கரவாத கும்பலை காப்பாற்றும் அளவுக்கு ஐ.நாவுக்கு என்ன நிர்ப்பந்தம்? மூர்க்கத்தோடு எதற்காக கள்ள உறவு? பயங்கரவாதிக்கு பாதுகாப்பு கொடுத்தால் தாக்கப்படுவது நியாயமே..


RAMAKRISHNAN NATESAN
அக் 11, 2024 19:21

ஐநாவில் நிரந்தர உறுப்பினராகணும் ன்னு எத்தனையோ வருஷங்களா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் ..... சீனாவை நிரந்தர உறுப்பினராக்க பரிந்துரைத்தார் நேரு ..... ஆனா சீனாதான் நாமளும் ஆயிடக்கூடாது ன்னு முட்டுக்கட்டை போடுது ..... இந்த லட்சணத்துல நாம அமைதிப்படைக்கு வீரர்களை அனுப்பறோம் ..... அதுவும் காங்கிரஸ் காலத்துலேர்ந்து ....


Sudha
அக் 11, 2024 19:00

அமைதி படை? They dont deserve.


GMM
அக் 11, 2024 18:59

உள்நாட்டு கலவரம் என்றால், ஐ. நா. பாதுகாப்பு. லெபனான் கிஸ்புல்லா பயங்கர வாதிகள் பிடியில். இது தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு. அமைதி படை வீரர்கள் வெளியேற வேண்டும் அல்லது பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும். இஸ்ரேல் தன்னை பாதுகாக்க வேண்டிய அவசியம். லெபனான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பது ஆபத்து. தவறு ஐ. நா. மற்றும் இந்திய அமைதி படை மீது தான். உண்மையான அமைதி படை இஸ்ரேல்.


தாமரை மலர்கிறது
அக் 11, 2024 18:55

ஐநா படை இருக்கும் இடத்திலிருந்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் ஏவி வருகிறார்கள். அதனால் அந்த இடத்தை நோக்கி இஸ்ரேல் தாக்கியுள்ளது. ஐநா லெபனானை விட்டு வெளியேறுவது நல்லது. இஸ்ரேல் தன்னை பாத்துக்கொள்ள உரிமை உள்ளது.


Lion Drsekar
அக் 11, 2024 18:53

தீய சக்திகளை வேரோடு அழிப்பதுதான் உலக அமைப்பின் கடமை இதற்க்கு மேல் சொல்வது நாகரீகமாக இருக்காது, வந்தே மாதரம்


முக்கிய வீடியோ