உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதிவாரி சர்வேயில் மக்கள்  பங்கேற்பது கட்டாயமில்லை

ஜாதிவாரி சர்வேயில் மக்கள்  பங்கேற்பது கட்டாயமில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'ஜாதிவாரி சர்வேயில், மக்கள் பங்கேற்பது கட்டாயம் இல்லை' என, கர்நாடக உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கர்நாடகாவில் கடந்த 22ம் தேதி ஜாதிவாரி சர்வே துவங்கியது. இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 13ல் மாநில காங்., அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அகில கர்நாடக பிராமண மகாசபா, கர்நாடக ஒக்கலிகர் சங்கம், மூத்த வக்கீல் சுப்பாரெட்டி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த பொதுநல மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''ஜாதிவாரி சர்வேயில் சேகரிக்கப்படும் தரவுகளை பாதுகாக்கும் பொறுப்பு, மின் ஆளுமை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விரைவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வோம்,'' என்றார். அரசு தரப்பில் மூத்த வக்கீல் ரவிவர்ம குமார் வாதிடுகையில், ''ஜாதிவாரி சர்வேயில் மக்கள் பங்கேற்பது தன்னார்வமானது. யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்,'' என்றார். நீதிபதிகள், 'சர்வே செயல்முறையை நிறுத்து வது பொருத்தமானது அல்ல. இதில் சேகரிக்கப்படும் தரவுகளை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பாதுகாத்து ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மக்கள் தாமாக முன்வந்து சர்வேயில் பங்கேற்கலாம். 'எந்த தகவலையும் வழங்க வேண்டிய கட்டாயம் இல்லை. சர்வேயில் ஈடுபடுவோர், அதில் பங்கேற்க மக்களை வற்புறுத்தக் கூடாது' என தெரிவித்து, டிசம்பர் இரண்டாவது வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Arul Narayanan
செப் 26, 2025 19:59

சர்வே முடிந்த பின் இதை சொல்லியே வழக்கு போடுவார்கள். நல்ல ஐடியா தான்.


MUTHU
செப் 26, 2025 14:36

இதுக்கு பருத்தி மூட்டையை குடோனிலேயே வைத்திருக்க வேண்டியது தானே.


Ms Mahadevan Mahadevan
செப் 26, 2025 13:13

ஆக மொத்தத்தில் ஜாதி ஒழியாது. பாரதி பாடிய ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பது கனவுதான் போலும்


Ms Mahadevan Mahadevan
செப் 26, 2025 13:11

என்றுதான் ஜாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படுமோ? எல்லா அரசியல் , ஓட்டு வாங்க போடும் .......


sundar
செப் 26, 2025 12:37

ஜாதி ரிசர்வேஷன் படி வேலைகள் வேண்டும். யோவ் தாசில்தாரே சீக்கிரம் சர்டிஃபிகேட் கொடு ன்னு ஒரே சத்தங்கள். எங்க ஆள் இருபது சதவீதம் இருக்கான் அந்த வேலையை கொடு ன்னு மேடையில் கதற வேண்டியது. ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டாம்... ஜாதி ஒழியணும் இன்னொரு பேச்சு. அது வேற வாய் இது நாற வாய்.


GMM
செப் 26, 2025 09:19

சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு நாள். கலப்பு திருமணம், மத மாற்றம், வெளிநாடு குடியுரிமை பல நாள். பிறப்பு இறப்பு தொடரும். பிற மாநில மக்கள் குடியிருப்பர். அவர்கள் சாதி விவரம் கர்நாடகா மாநிலத்தில் இருக்காது. கணக்கெடுப்பை அப்டேட்ஸ் செய்ய போவது இல்லை. மேலும் பிறப்பு சான்றில் சாதி பெயர் பதிவது இல்லை? சாதியை அறிய அரசு ஆவணம் தேவை. சாதியை வாக்கு வங்கி சாதி தலைவர் மூலம் தான் அறிய முடியும். அதிக மக்கள் பங்கேற்க போவது இல்லை.? வெட்டி வேலை நித்திரைக்கு கேடு. காங்கிரஸ் கட்சி பயனற்ற பணி செய்யும் கட்சி. நீதிபதி இந்த பயனற்ற பணி பற்றி கேள்வி எழுப்பி நிறுத்த முடியும்.


Moorthy
செப் 26, 2025 08:07

இந்து மதத்தின் சாபமே இந்த சாதிதான்


முதல் தமிழன்
செப் 26, 2025 07:35

இப்படி செஞ்சா சரியான முடிவு கிடைக்காது. இந்த சர்வே முடிவுகளை வைத்து முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது.


Palanisamy T
செப் 26, 2025 07:26

நாளைய இந்திய நாட்டிற்கு நல்ல வழிக் காட்டியாக இந்த தீர்ப்பு அமைய வேண்டும். சாதி வெறித்தனங்களைக் வெளிக் காட்டி நான் உயர்சாதி, நீ கீழ்சாதியென்று மக்களை பிரித்து ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி ஹிந்து மதத்திற்க்கே கெட்டப் பெயரை உருவாக்கி கொடுக்கும் இந்த பிற்போக்குச் சிந்தனை மறைய வேண்டும். ஆதலால் இந்த சாதி கணக்கெடுப்பில் சம்பந்தப் பட்டவர்கள் கலந்துக் கொள்ளாமல் இருப்பது நன்று. வெளியூர்ச் சென்று வேலைச் செய்யும் இந்தியர்கள் சாதி அடிப்படையிலா வேலைக்கு அமர்த்தப் படுகின்றார்கள்?


Indian
செப் 26, 2025 06:59

அப்போ எதுக்கு இந்த சர்வே ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை