வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கடவுளுக்கு நன்றி...மிகவும் மோசமான வான்வெளியில் விமானிகள் பத்திரமாக பயணிகளை kappatriyullanar.
புதுடில்லி: டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்ற, 'இண்டிகோ' விமானத்தின் விமானி, மோசமான வானிலையால் அசம்பாவிதத்தை தவிர்க்க, பாகிஸ்தான் வான்வழிக்குள் நுழைய அனுமதி கேட்டதாகவும், ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு, கடந்த 21ல், 227 பயணியருடன், இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. பஞ்சாபின் பதன்கோட் வான்வழியில் பறந்த போது, பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த சேதம்
மோசமான வானிலையில் சிக்கிய விமானம், விமானியின் சாதுர்யத்தால், ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, 227 பேர் உயிர் தப்பினர். எனினும், விமானத்தின் முகப்பு பகுதி பலத்த சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அசம்பாவிதத்தை தவிர்க்க, பாக்., வான்வழியை பயன்படுத்த விமானி அனுமதி கேட்டதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் தரப்பு மறுத்திருந்தது. இந்நிலையில், டி.ஜி.சி.ஏ., எனப்படும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:விமானம் நடுவானில் பறந்த போது மோசமான வானிலை நிலவியது. இதனால், சர்வதேச எல்லையை நோக்கி விலக, நம் விமானப் படையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதையடுத்து, பாகிஸ்தானின் லாகூர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட விமானியர், அந்நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதி கோரினர். இதற்கும் அனுமதி தரப்படவில்லை. விசாரணை
வேறு வழியின்றி, மோசமான வானிலையில் விமானத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு விமானி தள்ளப்பட்டார். விமானம் நிமிடத்திற்கு, 8,500 அடி கீழ் இறங்கிய போதிலும், விமானி சிறப்பாக செயல்பட்டு, ஸ்ரீநகரில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
கடவுளுக்கு நன்றி...மிகவும் மோசமான வான்வெளியில் விமானிகள் பத்திரமாக பயணிகளை kappatriyullanar.