உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி குறித்து காங்.,கிடம் எதிர்பார்ப்பது தவறு: பிரதமர் மோடி சாடல்

வளர்ச்சி குறித்து காங்.,கிடம் எதிர்பார்ப்பது தவறு: பிரதமர் மோடி சாடல்

புதுடில்லி: '' அனைவருக்குமான வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு,'' என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கூறினார்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q95u6zwe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0*ஜனாதிபதியின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம்மை முன்னேற்றி செல்வதாகவும் அமைந்துள்ளது. இந்த உரை மீது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.*அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மேலும், அது அவர்களின் திட்டத்திற்கு பொருந்தாது. முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம்.*வளர்ச்சிக்கான எங்களின் திட்டத்தை மக்கள் சோதித்து புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். எங்களின் வளர்ச்சிக்கான திட்டம் என்பது நாடே முதன்மை என்பதாகும்.* காங்கிரஸ் ஆட்சியில், அனைவரையும் திருப்திபடுத்த வேண்டி இருந்தது. இது தான் அவர்களின் அரசியல்பாதையாக இருந்தது. ஆனால், 2014க்கு பிறகு, நிர்வாகத்திற்கான மாற்று அரசு அமைந்ததும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.* வளர்ச்சி மீதான பார்வையால் தான் நாட்டு மக்கள் எங்களை 3வது முறையாக தேர்வு செய்தார்கள். நம்மிடம் உள்ள கருவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். நாட்டின் வளங்களை மக்களின் நலனுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும். * சமூகத்தில் சாதியை வைத்து விஷம் பரப்பப்பட்டது. ஓ.பி.சி., ஆணையத்திற்கு அங்கீகாரம் கேட்டும் காங்கிரஸ் அதனை தரவில்லை. ஓ.பி.சி., ஆணையத்திற்கு பா.ஜ., அரசு தான் சட்ட அங்கீகாரம் வழங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பட்டிலினம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இதனை வரவேற்றனர்.*பார்லிமென்டின் இரு வைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பா.ஜ., தான். புதிய பார்லிமென்டில் முதல் முடிவாக மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவது இருந்தது.* அம்பேத்கரை காங்கிரஸ் வெறுத்த காலம் உண்டு. அவருக்கு எதிராக சதி செய்தது. பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்குவது குறித்து அக்கட்சி பரிசீலனை செய்யவில்லை. அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தினால் தான், தற்போது காங்கிரஸ் ' ஜெய்பீம்' என்கிறது.காங்கிரஸ். 2 முறை தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது. * நிறத்தை மாற்றுவதில் காங்கிரஸ் கை தேர்ந்தது. தற்போது அக்கட்சி வேகமாக தனது முகமுடியை மாற்றியதை அனைவரும் பார்க்கின்றனர். *பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இதனால் தான் கூட்டணி கட்சிகள் கூட அக்கட்சியை விட்டு விலகிச் செல்கின்றன. பிறரை பலவீனப்படுத்தாமல் உங்கள் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், மக்கள் எப்போதாவது காங்கிரசை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.*திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு அனைத்து முனைகளிலும் பணியாற்றி உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. *ஏழைகளை கைதூக்கிவிட எங்களதுஆட்சி காலத்தில் நடந்த பணிகளை போல், முன்பு எப்போதும் நடந்தது கிடையாது.*வளரும் நாட்டில் இருந்து வளர்ந்த நாடு வரையிலான பயணம், உள்கட்டமைப்பு வழியாகவே செல்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.*புதிய தொழில்நுட்பம் பெற இந்தியா நீண்ட காலம் காத்திருந்தது. இதில் மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கி இருந்தது.*காங்கிரஸ் ஆட்சியில் இருந்த லைசென்ஸ் அனுமதி சீட்டு ராஜ்ஜியம் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதித்தது. லஞ்சம் பெருகியது.*காங்கிரசின் தவறான கொள்கைகளால் ஹிந்துக்களின் பிம்பம் களங்கப்படுத்தப்பட்டது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Saai Sundharamurthy AVK
பிப் 07, 2025 16:31

முற்றிலும் உண்மை. மோடிஜி காங்கிரஸை நன்கு புரிந்து வைத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் தான் பெருகியிருந்தது. அவரவர்கள் தசங்கள் குடும்ப சொத்துக்களை பெருக்குவதிலேயே காலத்தை தள்ளினர்.


Narayanan Muthu
பிப் 06, 2025 19:38

வெறுப்பு பேச்சு மதவாதம் வளர்ச்சியை காங்கிரஸிடம் எதிர்பார்ப்பது அவருதான். அதை தாவி உங்கள் ஆட்சியில் வேறெந்த வளர்ச்சியும் கண்ணுக்கெட்டிய தூரம் தென்படவேயில்லை. அதானி அம்பானி வளர்ச்சி உங்களின் கொள்கை. அது நாட்டை சீரழித்துவிடும் என்பதை உங்கள் பக்தாள்களை தவிர மற்றவர்கள் உணர்ந்து வருகிறார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 06, 2025 19:24

புதிய தொழில்நுட்பம் பெற இந்தியா நீண்ட காலம் காத்திருந்தது. இதில் மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கி இருந்தது ....... BSNL ஐ ஊத்தியும் மூடாமே ..... அதற்கு 4G யும் கொடுக்காம சித்திரவதை செஞ்சீங்களே ஜீ ?? அதைச்சொல்றீங்களா ???


Bahurudeen Ali Ahamed
பிப் 06, 2025 18:24

பிஜேபியிடம் எதிர்பார்த்துதான் மக்கள் 3வது முறையாக உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், ஆனால் என்ன பிரயோஜனம் பெட்ரோல் விலை உயர்வு, பணவீக்கம் பெருத்துக்கொண்டே செல்கிறது அதன் பொருட்டு விலைவாசி விண்ணைமுட்டி நிற்காமல் உயர்ந்துகொண்டே செல்கிறது, அமெரிக்க டாலரின் மதிப்பை ரூ 40க்கு கொண்டு வருவேன் என்றீர்கள் இன்று அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ 87, இன்னும் நேரு பெயர்தான் உங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
பிப் 06, 2025 19:47

நேரு இருக்கும் போதுதானே இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்கிற தனி நாட்டை கேட்டு பிரிந்து போனீர்கள் அப்போதே நீங்களும் போயிருக்க வேண்டியது தானே .அப்புறம் ஏன்?இன்னும் எங்கள் இந்துக்களின் இந்தியாவில் இருந்து கொண்டு புலம்ப வேண்டும்.இப்போதும் கூட நீங்கள் இங்கிருந்து கொண்டு சிரமப் படாமல் உங்கள் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் சுபிட்சமாக வாழுங்கள் உங்களை யாரும் தடுக்கவில்லை.


Bahurudeen Ali Ahamed
பிப் 08, 2025 12:23

வெள்ளை அண்ணே என்னே உங்களது ஞானம், நான் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், அதைவிடுத்து இந்தியா ஹிந்துக்களுக்கானது என்று பூச்சாண்டி காட்டவேண்டாம், இந்தியா இந்தியர்கள் அனைவருக்குமானது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்


பஜனேஷ்
பிப் 06, 2025 17:46

இவிங்க எழுதிக்.குடுத்ததை அவுரு வாசிக்க அவர் வாசிப்பு ஆஹா ஓஹோன்னு இருந்ததுன்னு இவிங்களே பாராட்டி, படிச்சதுக்கு நன்றி தெரிவிக்கும் காமெடி வேறு எந்த நாட்டிலும் இல்லை.


Amar Akbar Antony
பிப் 06, 2025 19:05

தமிழ்நாட்டில் மட்டும் ஆளுநரை தீய மு க வின் பொய் களஞ்சியத்தை வாசிக்கணுமாம் இல்லையனா கூச்சல் போடுவாங்க,அவமானப்படுத்துவாங்க, அதற்கு முடியாது போடான்னு வந்துட்டார் என்னபன்னுவது? மோடியிடம் நேர்மறை. அதற்காகவே குடியரசுத்தலைவரும் கொடுக்கப்பட்ட நேர்மையான உண்மையான கபடமற்ற உரையை வாசித்தார். வயித்தெரிச்சல் பட்டால் இருநூறு கிடைத்ததல்லவா.அதில் பர்னால் வாங்கிக்கொள்ளவும்...


அப்பாவி
பிப் 06, 2025 17:43

ஆம்... 2014 வரைக்கும் தேசத்த வளர்த்து விட்டது தாங்க தான்னு நினப்பு.


நசி
பிப் 06, 2025 17:38

ஊழல் பெருகி கொண்டே போகிறது சுப்ரீம் கோர்ட் கண் முடிதனமாக ஊழல் வாதிகளுக்கு நீண்ட வாயதா கொடுக்கிறது ஆர்என்ரவி மாதிரி படித்த பண்பாளர்களை கேவலமான்பொய்யான வாதத்தை முன1வைக்கும் சீனியர் வக்கீல்களின்பொய்யானவாதங்களை வைத்து இழி படுத்துகிறது சும்மா காங் டார்கெட் பன்றது என்னபிரயோசனம்


Smbs
பிப் 06, 2025 17:35

பல்லவிய மாததவும் போரடிக்குது எப்ப பாத்தாலும் இதய


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை