உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒழிக்க வேண்டும்!

ஒழிக்க வேண்டும்!

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மிரட்டும் வகையில் பேசுகின்றன. நம் உடலில் புற்றுநோய் ஏற்பட்டால் அதை எப்படி ஒழிக்க வேண்டுமோ, அதுபோலவே இந்தப் பிரச்னையையும் பார்க்க வேண்டும். கங்கனா ரனாவத் லோக்சபா எம்.பி., - பா.ஜ.,

பின்வாசல் வழியாக!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை பின்வாசல் வழியாக கொண்டு வருவதே, பா.ஜ.,வின் நோக்கமாகும். அதற்காகவே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

ஒரு நாடு, ஒரு சட்டம்!

அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். பொது சிவில் சட்டம் என்பது நாடு முழுதுக்குமானது; ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கானது அல்ல. ஒரு நாடு, ஒரு சட்டம் என்பதே தற்போதைய தேவை. முக்தார் அப்பாஸ் நக்வி மூத்த தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி