உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்லாரி சிறையில் தர்ஷனிடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

பல்லாரி சிறையில் தர்ஷனிடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை

பல்லாரி: கொலை வழக்கில் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகர் தர்ஷனிடம், வருமான வரி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கொலை நடந்த பின் போலீசார் நடத்திய விசாரணையில், பா.ஜ.,வை சேர்ந்த பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் மோகன்ராஜிடம் இருந்து, தர்ஷன் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியது தெரிந்தது. போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரான மோகன் ராஜும், 'தர்ஷன் என்னிடம் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ஆனால், என்ன காரணம் என கூறவில்லை' என்று கூறியிருந்தார். இது பற்றி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் கூறப்பட்டு இருந்தது.லட்சக்கணக்கான ரூபாய் கை மாறி இருப்பதால், தர்ஷனிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் வருமான வரி அதிகாரிகள் அனுமதி பெற்றனர். நேற்று காலை பல்லாரி சிறைக்கு சென்ற வருமான வரி அதிகாரிகள், பார்வையாளர்கள் அறையில் வைத்து தர்ஷனிடம் விசாரணை நடத்தினர். சில தகவல்களை தர்ஷனிடம் இருந்து அவர்கள் பெற்று கொண்டதாக சொல்லப்படுகிறது. இன்றும் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ