வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்: ஹெலிகாப்டரில் மீட்டது ராணுவம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனை இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்காக இந்திய ராணுவத்துக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரஜோரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். ஆனால், சிறுவன் ஒருவர் ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்றில் சிக்கிக் கொண்டான். நாலாபுறமும் தண்ணீர் செல்வதால், அச்சிறுவனால் அங்கிருந்து தப்ப முடியவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gb368vwd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து சிறுவனை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் அங்கு நிலவும் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவத்தின் உதவி கோரப்பட்டது.கரையில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மோசமான சூழ்நிலை மற்றும் பலத்த மழை பெய்த போதும், ஒருங்கிணைப்ப குழுவினர் சிறுவனை மீட்டு, ஹெலிகாப்டர் மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அந்தச் சிறுவன் பாதுகாப்பாக , மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனை பார்த்த அப்பகுதி மக்கள், உள்ளூர் மற்றும் சிவில் அதிகாரிகள் ராணுவத்துக்கும், போலீசாருக்கும் பாராட்டுத் தெரிவித்தனர்.