உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங்குடன் ஜெகன்மோகன் சந்திப்பு

மன்மோகன் சிங்குடன் ஜெகன்மோகன் சந்திப்பு

புதுடில்லி: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆந்திராவில், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி எம்.பி.,யுமான ஜெகன்மோகன், 'ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற பெயரில் தனி கட்சி தொடங்கினார். பின்னர், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, இடைத் தேர்தலில், கடப்பா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர், ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அண்மையில் திடீர் சோதனை நடத்தியது. இதையடுத்து, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், டில்லி சென்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, ஆந்திர விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து, ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த சந்திப்பின்போது, பேசப்பட்ட விவரங்கள் குறித்து, அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகன் நீக்கப்பட்டப் பின்னர், முதன் முறையாக, காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை ஜெகன்மோகன் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ