உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்தார் ஜக்தீப் தன்கர்

துணை ஜனாதிபதி இல்லத்தை காலி செய்தார் ஜக்தீப் தன்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஜக்தீப் தன்கர், 40 நாட்களுக்கு பிறகு அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவர் அபய் சவுதாலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடியேறினார்.

ராஜினாமா

துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21 ல் தனது உடல்நிலையை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இருப்பினும் மத்திய அரசுடன் மோதல் போக்கு காரணமாகவே ஜக்தீப் தன்கர் பதவி விலகினார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை ஒதுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், ஜக்தீப் தன்கருக்கான பங்களாவையும் தயார் செய்துள்ளது. இருப்பினும், அந்த பங்களாவுக்கு செல்வது தொடர்பாக எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.கடந்த வாரம் அவர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். இதனை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பதவி விலகிய பிறகு ஜக்தீப் தன்கர் வெளியில் வராமலேயே இருந்தார். அவர், துணை ஜனாதிபதிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வீட்டின் வளாகத்திலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்ததுடன், அந்த வீட்டிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து வந்தார். கடந்த 40 நாட்களாக அங்கேயே தங்கியிருந்தார்.இன்று அவர், அங்கிருந்து ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று பல் டாக்டரை பார்த்து விட்டு திரும்பி உள்ளார்.

குடியேறினார்

இந்நிலையில், இன்று( செப்.,01) ஜக்தீப் தன்கர் அந்த இல்லத்தை காலி செய்தார். அவர் இந்திய தேசிய லோக் தள கட்சியின் அபய் சிங் சவுதாலாவுக்கு சொந்தமாக டில்லியின் சத்தார்பூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் குடியேறினார். அவருக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் பண்ணை வீட்டுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டன.இது தொடர்பாக சவுதாலா கூறுகையில், எங்களுக்கு இடையே குடும்ப உறவு உள்ளது. அவர் என்னிடம் வீடு ஏதும் கேட்கவில்லை. நான் தான் அவருக்கு வழங்கினேன் என்றார்.

தேர்தல்

ஜக்தீப் தன்கர் பதவி விலகியதால் காலியாக உள்ள, துணை ஜனாதிபதி பதவிக்கு வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். இண்டி கூட்டணி சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:17

கட்சிக்கு நீ எவ்வளவு விசுவாசமாக இருந்ததாலும், நாட்டுக்கு நல்லதா இருந்தாலும், அந்த ரண்டு குஜராத்திகளுக்கு பிடிக்காத வேலையை சுயமாக செஞ்சா, கல்தா தான். அட்ரஸே இல்லாம ஆக்கிடுவாங்க. கட்சியோட கொள்கை இது தான்


T.sthivinayagam
செப் 01, 2025 21:07

ஜக்தீப் தன்கர் பிரபஞ்ச சூஷ்ம சூழ்ச்சியை இப்போது புரிந்து கொண்டு இருப்பார் என்று மக்கள் கூறுகின்றனர்


திகழ்ஓவியன்
செப் 01, 2025 20:54

அமித் ஷா வுக்கு பிரதமர் பதவி ஆசை வந்து விட்டதாம் , RSS உம ஓகே சொல்லிவிட்டார்களாம் பாவம் மோடி


PALANISWAMY
செப் 01, 2025 20:07

மேற்படி வகையில் S உமாராணி, U.S. சரண்யா மற்றும் U.S. நிகில்குமார் அவர்களுக்கு பாத்தியப்பட்டு அனுபவித்து வந்து தற்போது மேற்படி பவர் ஏஜென்ட் POWER OF அட்டர்னி என்ற வகையில் எனது சுவாதீனத்தில் இருந்து வரும் இதனடியிற்கண்ட சொத்தை நாளது தேதியில் உங்கள் நிறுவனமான


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2025 20:32

ஆர்எஸ்எஸ் டில்லி தலைமை அலுவலகத்தின் பத்திரத்தை தானே படிக்கிறே? கோவில் இடத்தை ஆட்டைய போட்டு கட்டிய கும்பல் தான் நீங்க


தத்வமசி
செப் 01, 2025 19:47

பதவி வரும் போது பணிவு வர வேண்டும். எதிரியை விட துரோகியை மன்னிக்கவே கூடாது.


Palanisamy Sekar
செப் 01, 2025 19:46

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கின்ற மர்ம நபர்களை போலவே இந்த து ஜனாதிபதியும் நடந்துகொண்ட விதம் ஏற்புடையயதல்ல. வயதுக்கேற்ற பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் வெளியே முகத்தை காட்டக்கூட முடியாது. நம்ம சி பி ராதாகிருஷ்ணன் அவர்களின் நடவடிக்கையை பார்த்து தெரிந்துகொள்ளுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2025 20:30

அமேசான் காட்டில் கூட பார்க்க முடியாது


திகழ்ஓவியன்
செப் 01, 2025 19:25

அன்று இவர் பிஜேபி தலைமை பேசை கேட்டு மம்தா வுக்கு எப்படி குடைச்சல் கொடுத்தார் , என்ன வெல்லாம் செய்தார் , ஆனால் இன்று எப்படி இவரை கருவேப்பிலை போல் தூக்கி எரிந்து விட்டார்களே , ஏன் ராஜினாமா செய்தேன் என்று சொல்லக்கூட வாய்ப்பு தரவில்லையே


Abdul Rahim
செப் 01, 2025 18:55

நாங்க பங்களா ஒதுக்குவோம் ஆனா நீர் அதுல குடிபுக கூடாது நீரே வேற எங்காச்சும் போற மாதிரி போயிடனும் என்ன புரிஞ்சுதா


AMMAN EARTH MOVERS
செப் 01, 2025 18:49

மோடியை எதிர்ப்பவர்கள் காணாமல் போவார்கள்


vivek
செப் 01, 2025 20:26

மோடியின் முன் கெட்டவர்கள் அழிவார்கள் ....earth movers வேலை இருக்காது


திகழ்ஓவியன்
செப் 01, 2025 20:53

மோடி யே இவரை காலி சேயா அமிதா ஷா , வுக்கு பிரதமர் ஆசை வந்து விட்டது , அப்போ மோடியே தூக்கி எரிய படுவார்


Abdul Rahim
செப் 02, 2025 12:56

ஒட்டு திருட்டு உண்மை முழுதாக வெளிவரும்போது மோடியே காணாமல் போவார் அரசியலில் இருந்து


Abdul Rahim
செப் 01, 2025 18:10

பதவியின் காலமெல்லாம் பாஜவுக்காக உழைத்தார் எதிர்கட்சிகளை ஒடுக்குவதில் முழு மூச்சாய் மத்திய அரசிற்க்காக பாடுபட்டார் கடைசியில் இப்படி முதுகில் குத்தி அனுப்பி விட்டது பாஜக அரசு, கௌரவமாக பாஜக ஒதுக்கிய பங்களாவை நிராகரித்ததன் மூலம் பதவியில் இல்லாவிட்டாலும் மேலானவர் என்பதை நிரூபித்துவிட்டார்.


ஆரூர் ரங்
செப் 01, 2025 20:43

காங்கி எம்எல்ஏ வாகவே அரசியலில் நுழைந்தவர். அந்தக் கொள்கை இன்னும் ஊறியுள்ள ஆளு. இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடுங்கிய ஆள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை