உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்களின் சிந்தனைகளை நசுக்கும் பயிற்சி மையங்கள்; ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு

மாணவர்களின் சிந்தனைகளை நசுக்கும் பயிற்சி மையங்கள்; ஜக்தீப் தன்கர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: திறமையான மாணவர்களின் சிந்தனைகளை பயிற்சி மையங்கள் நசுக்கவதாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குற்றம்சாட்டியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ரான்பூரில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது; அதிகரித்து வரும் பயிற்சி மையங்கள் மாணவர்களின் சிந்தனைகளை நசுக்கும் மையங்களாக மாறி வருகின்றன. இது நமது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு இது பெரும் அச்சுறுத்தலாகும். நமது கல்வி முறையை இவ்வளவு கறைபடுத்தப்படுவதையும், களங்கப்படுத்தப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது. பயிற்சி மையங்கள் விளம்பரங்களுக்காக பணத்தை வாரி இறைக்கின்றன. இந்த விளம்பரங்கள் கவர்ச்சிகரமானவை. இவை, நமது நாகரிக மரபுகளுக்கு எதிரானவை, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ