உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16வது நாளை எட்டியது ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம்

16வது நாளை எட்டியது ஜக்ஜித் சிங்கின் உண்ணாவிரதம்

சண்டிகர் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், 70, நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது.வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர். பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவ., 26ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். இந்த போராட்டம் நேற்று 16வது நாளை எட்டியது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவால், 11 கிலோ எடை குறைந்துள்ளார். அவரது ரத்த சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாக உள்ளது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழு அருகிலிருந்து கண்காணித்து வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசுடன் பேச்சு நடத்த வரும்படி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் நேற்று விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kalyanaraman
டிச 12, 2024 09:24

பஞ்சாப் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை பஞ்சாப் அரசிடம் தானே வலியுறுத்த வேண்டும்? ஏன் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்? 70 வயது நபர், 16 நாட்களுக்கு தொடர்ந்து உண்ணாமல் இருந்து உயிர் வாழ முடியுமா?? இந்தப் போராட்டத்திற்கு அமெரிக்கா ஜார்ஜ் சோரஸின் பணம் பின்னணியில் இருக்கிறதோ?


நிக்கோல்தாம்சன்
டிச 12, 2024 09:10

தேர்தலுக்கு முன், தேர்தலுக்கு பின் என்று எழுதலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை