உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்

எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம்!: அயோத்தியில் கோலாகலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷமே ஒலித்தது. பல நூற்றாண்டு கனவான ராமர் கோவிலின் திறப்பால் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா இன்று (ஜன.,22) கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த சிறப்பு வாய்ந்த விழாவில் பங்கேற்று, குழந்தை வடிவிலான ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். விழாவை காண நாடு முழுவதும் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஹிந்து அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அயோத்தியில் குவிந்தனர்.துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் எல்லாம் மொத்தமாக அயோத்திக்கு வந்துவிட்டதால், அவர்களாலும், அவர்களது பக்தர்களாலும், தொண்டர்களாலும் எங்கும் காவி அணிந்தவர்களின் கூட்டமே காணப்பட்டது. அதேபோல் லட்சக்கணக்கான பக்தர்களும் இந்த கோலாகல விழாவை காண வருகை தந்துள்ளனர். மதியம் 12:20 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் எழுப்பிய ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணைப் பிளந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி