உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயகத்தை பேசுவோர் முதலில் செயல்படுத்துங்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் குட்டு

ஜனநாயகத்தை பேசுவோர் முதலில் செயல்படுத்துங்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு ஜெய்சங்கர் குட்டு

மியூனிக்: ''ஜனநாயகம் என்பதை மேற்கத்திய நாடுகளின் அடையாளமாக நினைக்கின்றனர். அதே நேரத்தில் உலகின் மற்ற நாடுகளில் ஜனநாயத்துக்கு எதிரான அமைப்புடன் கைகோர்க்கின்றனர். மேற்கத்திய நாடுகள், முதலில் தாங்கள் பேசுவதை செயல்படுத்தட்டும், என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.ஜெர்மனியின் மியூனிக் நகரில், 61வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடந்து வருகிறது. பல்வேறு சர்வதேச மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக இதில் விவாதிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bvh477w1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தேவையான பலன்

இதன்படி தற்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஓட்டளிப்பு என்பது தொடர்பான விவாதம் நடந்தது. இதில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார்ஹ் ஸ்டோர், அமெரிக்க எம்.பி., எலிசா, வர்சோவா மேயர் ரபால் டோராஸ் கோவ்ஸ்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, சர்வதேச அளவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும், ஜனநாயகம் உணவு அளிக்காது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தேன். அதன் மை இன்னும் அழியவில்லை. கடந்தாண்டு பார்லிமென்டுக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில், 70 கோடி பேர் ஓட்டளித்தனர். அந்த ஓட்டுகள் அனைத்தும் ஒரே நாளில் எண்ணப்பட்டன.கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதனால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளில் வேண்டுமானால் இருக்கலாம். பொதுப்படையாக கூற முடியாது.ஜனநாயகம் உணவு வழங்காது என்பதையும் மறுக்கிறேன். உண்மையான ஜனநாயக நாடாக உள்ளதால், இந்தியாவில் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. மக்கள்தொகையில், 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம், மக்களுக்கு தேவையான பலன்களை வழங்குகிறது.

சவால்

மேற்கத்திய நாடுகள், ஜனநாயகம் என்பதை தங்களுடைய அடையாளமாக, தாங்கள் உருவாக்கியதாக நினைக்கின்றன. அதே நேரத்தில் உலகின் மற்ற பகுதிகளில் ஜனநாயகத்துக்கு எதிரான அமைப்புகளுடன் கை கோர்க்கின்றன. தற்போதும் அது தொடர்கிறது. முதலில் தாங்கள் சொல்வதை, மேற்கத்திய நாடுகள் பின்பற்றட்டும்.அதுபோல உலகின் மற்ற நாடுகளில் உள்ள வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். அந்த வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, அந்த நாடுகளிடமிருந்து மேற்கத்திய நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்.பல்வேறு சவால்கள் இருந்தபோதும், மிகவும் குறைவான வருவாய் இருந்தபோதும், ஜனநாயகத்துக்கு உண்மையாக இந்தியா இருந்து வருகிறது. அதுபோல மற்ற நாடுகளில் உள்ள ஜனநாயகத்தையும் மதிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவி கோருகிறது உக்ரைன்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, மூன்று ஆண்டுகளை எட்டியுள்ளது. போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் டிரம்ப் பேசி வருகிறார்.இந்நிலையில், மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, ''அமெரிக்காவின் உதவி இல்லாமல் உக்ரைனால் மீள முடியாது,'' என, ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். இதற்கு, ''உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதையே விரும்புகிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்,'' என, வான்ஸ் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

morlot
பிப் 17, 2025 15:38

Democracy is strictly followed in france. Police dept is very honest unlike in india. There is no mps intervention to police. But there is racism here like e problems in india.yes there is no freebies at France. As


S. Neelakanta Pillai
பிப் 16, 2025 21:49

தைரியமான பேச்சு. உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சருக்கு பாராட்டுக்கள். வாழ்க இந்திய ஜனநாயகம்.


Karthik
பிப் 16, 2025 17:18

அவங்க நாட்டிற்கு போய் அங்கேயே அவுங்க வண்டவாளங்களை தைரியமாய் தண்டவாளமேத்தி பேசுகின்ற நம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமயோசித , கூர் வாள் பதிலும், தில்லும் திராணியும், நம் நாட்டிற்கு பக்கபலம். சல்யூட் அமைச்சரே. .


சுரேஷ்சிங்
பிப் 16, 2025 15:37

அமெரிக்கா குடுத்த பணத்தில் ஓட்டு சதவிகிதத்தை அதிகரிச்சோம். இல்லேன்னா 40 பர்சண்ட் கூட தேறாது.


S.L.Narasimman
பிப் 16, 2025 13:41

அவங்க நாட்டிற்கு போய் அங்கேயே அவிங்க வண்டவாளங்களை தைரியமாய் பேசவேண்டுமென்றால் ஜெய்சங்கருடைய தில் நம்நாட்டின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியிருக்கு.


ப்ரானேஷ்
பிப் 16, 2025 07:04

நம்ம ஜனநாயகத்தில்தான் பாஞ்சிலட்சம் போட்டு ரெண்டு கிடி வேலை குடுத்து ஆளுக்கு ஒரு வூடும் குடுத்தாங்க. எடுத்து சொல்லுங்க சார்


Barakat Ali
பிப் 16, 2025 07:59

அப்பாவி என்கிற ஐடியை கைவிட்டுவிட்டு மூன்று, நான்கு ஐடி யை சுவீகரிச்சாச்சு போல ???? எப்படி ஒவ்வொண்ணுக்கும் 200 ஓவா உண்டா ???? கலக்கு சித்தப்பு ..... என்ஜாய் .....


கிஜன்
பிப் 16, 2025 00:21

உலகம் பூரா உள்ளவங்களுக்கு குட்டு வைக்கிற உங்களுக்கு ....பட்ஜெட்ல 8 ஆயிரம் கோடி ருபாய் கட் பண்ணி.... உங்களுக்கே குட்டு வைச்சாங்க பாரு .... அவங்க தான் நிம்மி ....


N Sasikumar Yadhav
பிப் 16, 2025 07:04

அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் எப்போதும்போல கோபாலபுர கொத்தடிமையாக இருக்க பழகுங்கள். உலக அறிவு எல்லாம் உங்களுக்கு தேவையில்லாதது. கும்மிடிபூண்டியை தாண்டாதவர்களுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை


முக்கிய வீடியோ