உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உட்பட, 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு ஆசியான் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு மலேஷியா வசம் உள்ளது. நாம் இந்த அமைப்பின் முக்கிய நட்பு நாடாக உள்ளோம். மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று துவங்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மலேஷியா சென்று இருக்கிறார். ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இந்தியா- அமெரிக்கா இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை கோலாலம்பூரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAMESH KUMAR R V
அக் 27, 2025 13:04

நல்லது நடக்கட்டும். வாழ்த்துக்கள்.


duruvasar
அக் 27, 2025 10:59

குளிர்கால பாராளுமன்ற கூட்ட தொடர் ஆரம்பிக்கவுள்ளதால் , மலேசியாவில் பேசிவிட்டு ஊருக்கு போயி இந்தியாவுக்கு எதிராக வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகளை எழுத சொல்வார் . அதை கையில்வைத்துக்கொண்டு மாண்புமிகு அரசியலமைப்பு காவலர்கள் சபையை முடக்கும் செயலை தொடங்குவார் கள். தமிழ்நாடில்லிருந்து மடல்கள், கடிதங்கள் எழுதப்படும். ஓய்வு பெற்ற நீதியரசர்கள் வெகுண்டெழ வாய்ப்புக்கள் மிக அதிகம்.


புதிய வீடியோ