உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெய்சினா மாநாட்டில் பாக்., விவகாரம் வெளிப்படையாக பேசினார் ஜெய்சங்கர்

ரெய்சினா மாநாட்டில் பாக்., விவகாரம் வெளிப்படையாக பேசினார் ஜெய்சங்கர்

புதுடில்லி, ''பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் கூட மற்ற நாடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட முடியும். எனவே, நிலையான சர்வதேச ஒழுங்கு இன்றைய அவசியமாகிறது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.டில்லியில் நடந்து வரும், ரெய்சினா மாநாட்டில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசியதாவது:நாம் அனைவரும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்து பேசுகிறோம்.

ஜனநாயக சுதந்திரம்

இரண்டாம் உலகப் போருக்கு பின், ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியை மற்றொரு நாடு நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ளது என்றால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் தான். நாங்கள் ஐ.நா.,விடம் முறையிட்டோம். அவர்கள் படையெடுப்பை, சாதாரண பிரச்னை என்றனர். தாக்கியவரும், தாக்கப்பட்டவரும் சமமாக பார்க்கப்பட்டனர். இன்றைக்கு அரசியல் தலையீடு குறித்து பேசுகிறோம். பிற நாடுகளுக்குள் மேற்கத்திய நாடுகள் நுழைந்தால் அது ஜனநாயக சுதந்திரம் எனப்படுகிறது. அதுவே, பிற நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்குள் நுழைந்தால், அதில் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. எதிலும் ஒரு ஒழுங்கு வேண்டும் எனில், அதில் நேர்மை வேண்டும். நமக்கு வலுவான ஐ.நா., தேவை, வலுவான ஐ.நா.,வுக்கு நேர்மை அவசியம். ஒரு நாடு பிறருக்கு அபாயத்தை ஏற்படுத்த அவர்கள் மிகப்பெரிய நாடாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, நிலையான சர்வதேச ஒழுங்கு வகுக்கப்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.ரெய்சினா மாநாடு, 2016ல் துவங்கி ஆண்டு தோறும் டில்லியில் நடத்தப்படுகிறது. நம் வெளியுறவுத்துறையும், டில்லியில் உள்ள, 'ஆப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' என்ற சர்வதேச சிந்தனை குழாமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

காலி செய்யுங்கள்

இதற்கிடையே, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி பாக்., வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்திருந்தது.இதற்கு பதில் அளித்த நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதாரிப்பதே பிரச்னைக்கு காரணம் என்பது உலகம் அறிந்ததே. ''சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியை காலி செய்ய வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கபார்ட் பேசுகையில், ''அமெரிக்கர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' என, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுவதை தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. இதற்கும், பிரதமர் மோடியின், 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்ற கொள்கைக்கும் வேறுபாடு இல்லை,'' என்றார்.பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த, 'பாட்காஸ்ட்' பேட்டியில், 'இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னை கருத்தியல் வேறுபாடுகளால் அல்ல. அவர்களின் பயங்கரவாத மனநிலையே அதற்கு காரணம்' என தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பாக்., வெளியுறவுத்துறை, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி கருத்து தெரிவித்து இருந்தது.

ஆக்கிரமிப்பை காலி செய்யுங்கள்

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த, 'பாட்காஸ்ட்' பேட்டியில், 'இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னை கருத்தியல் வேறுபாடுகளால் அல்ல. அவர்களின் பயங்கரவாத மனநிலையே அதற்கு காரணம்' என தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பாக்., வெளியுறவுத்துறை, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி கருத்து தெரிவித்து இருந்தது.இதற்கு பதில் அளித்த நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதாரிப்பதே பிரச்னைக்கு காரணம் என்பது உலகம் அறிந்ததே. பாகிஸ்தான் வீண் பொய்களை பரப்பாமல், சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியை காலி செய்ய வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பை காலி செய்யுங்கள்

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த, 'பாட்காஸ்ட்' பேட்டியில், 'இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னை கருத்தியல் வேறுபாடுகளால் அல்ல. அவர்களின் பயங்கரவாத மனநிலையே அதற்கு காரணம்' என தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பாக்., வெளியுறவுத்துறை, காஷ்மீரை சொந்தம் கொண்டாடி கருத்து தெரிவித்து இருந்தது.இதற்கு பதில் அளித்த நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதாரிப்பதே பிரச்னைக்கு காரணம் என்பது உலகம் அறிந்ததே. பாகிஸ்தான் வீண் பொய்களை பரப்பாமல், சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதியை காலி செய்ய வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
மார் 19, 2025 03:52

நேருவின் வெளியுறவுக்கொள்கை என்று உருட்டும் காங்கிரஸ் அப்படி ஒன்று இருந்ததாக நிரூபிக்க வேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
மார் 19, 2025 03:46

ஆக்கிரமிக்க பட்ட காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பாரதம் பாகிஸ்தானை முற்றிலுமாக காலி செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்.


கிஜன்
மார் 19, 2025 02:38

ஜெய்ஷ்ங்கர் அவர்களின் ஒவ்வொரு உரையும் .... கூர்மையான வாள் போன்றது .... இவர் தான் முதலில் ... பகலில் வணிகத்தையும் ... இரவில் தீவிரவாதத்தையும் அனுமதிக்க முடியாது என்று அறைகூவல் விடுத்தார் .... இன்று ...பாதிக்கப்பட்டவரும் .... தாக்கியவரையும் ஒரே நிலையில் வைத்து பார்த்தது ஐ.நா ... என்று அதன் நடுநிலைமையை கேள்விக்குறி ஆக்குகிறார் .... அருமை சார் ... அருமையான வார்த்தைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை