உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு ஜிலேபி: 1 கிலோ ஆர்டர் போட்டு கொண்டாடிய பா.ஜ.,!

ராகுலுக்கு ஜிலேபி: 1 கிலோ ஆர்டர் போட்டு கொண்டாடிய பா.ஜ.,!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஒரு கிலோ ஜிலேபியை ஆன்லைனில் பா.ஜ., ஆர்டர் செய்தது, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.ஹரியானா சட்டசபை தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாநில பா.ஜ.க., வெற்றி கொண்டாட்டத்தின் இடையே, கேளிக்கையாக, டில்லியின் கனாட் பிளேஸில் அமைந்துள்ள பிகனெர்வாலா ஸ்டோரில் இருந்து 1 கிலோ ஜிலேபிக்கு பாஜ ஆர்டர் செய்தது. அந்த ஆர்டரில்,வரி உட்பட ரூ.609. பெறுநரின் முகவரி 24, அக்பர் சாலை -டில்லி காங்கிரஸ் தலைமையகம் என குறிப்பிட்டு, பெறுநர் பெயரில், ராகுலுக்கு ஜலேபி என அந்த கவரில் எழுதியிருந்தது.ஜிலேபியை பெறுபவர் பணம் செலுத்தும் வகையில் கேஷ் ஆன் டெலிவரி தேர்வு செய்யப்பட்டிருந்தது.ஹரியானாவின் குஹானாவில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் இருந்து ஜிலேபியை ருசி பார்த்த ராகுல், பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்.ஜிலேபி ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால் சரியாக மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், ஜிலேபி தொழிற்சாலைகள் இல்லை என்று பா.ஜ.,வினர் ட்ரோல் செய்தனர்.தற்போது, ஹரியானா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடிய பாஜக மறக்காமல்,ஜிலேபி பார்முலாவாக எடுத்து, ராகுலுக்கு ஒரு கிலோ ஜிலேபி பார்சலை ஆர்டர் போட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Lion Drsekar
அக் 11, 2024 12:19

அவருக்கு பிடித்தது சமோசா, வெள்ளத்தின் பொது , மக்கள் உயிருக்கு காதலித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் வெள்ளத்தைப் பார்வையிட விமானத்தில் நண்பர்களுடன் சமோசா சாப்பிட அந்த வீடியோ இப்பவும் யு டியூபில் உள்ளது ,. வந்தே மாதரம்


இளந்திரையன் வேலந்தாவளம்
அக் 10, 2024 13:37

ஜிலேப்பியால் தாக்கபட்டார் பப்பு


karunamoorthi Karuna
அக் 10, 2024 09:06

காங்கிரஸ் கொண்டாடும் பாகிஸ்தானில் உள்ள மீடியாவில் இவனுடைய ஜிலேபி விவசாயம் ஃபேக்டரி பற்றி விமர்சனம் செய்து தரக் குறைவான முறையில் விமர்சனம் செய்தார்கள் சிறப்பாகவும் அருமையாகவும் இருந்தது


INDIAN
அக் 10, 2024 08:27

அமுல் பேபி, பப்பு என்று பிஜேபியில் அனைவராலும் விமர்சிக்கப்பட்ட ராகுல், அவரின் பேச்சாற்றலால் மோடியையும் அவரது சகாக்களையும் திணறடித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது, மோடியைபோல அவர் எதையும் பார்த்தோ அல்லது ப்ராக்டிஸ் செய்தோ பேசுவதில்லை, ஆகவே தற்போது மோடியும் மிட்ஷாவும் கூட ராகுல்ஐ அமுல் பேபி என்று சொல்ல அச்சப்படுகிறார்கள் , ராகுலுக்கு வளையல் வாங்கி அனுப்பிய ஸ்மிரிதி ராணி இன்று எங்கே என்று தெரியவில்லை , ஆகவே இது பிஜேபியின் முதிர்ச்சியின்மையை, பக்குவமின்மையை காட்டுமே தவிர ராகுலுக்கு இன்னும் அது வலிமையை ஏற்படுத்தும் ,


Radhakrishnan Seetharaman
அக் 10, 2024 10:32

ஆம், 88 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் வலிமை கூடும்.


hari
அக் 10, 2024 14:57

ஓ அமுல் பேபி பேச்சு இவருக்கு ரொம்ப புரிஞ்சுதாக்கும்..... ஒரே கிறுக்கு கூட்டமா இருக்கே


தமிழ்வேள்
அக் 10, 2024 20:13

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகும் அளவுக்கு கிறுக்குத்தனம் செய்யும் போது, அதை ஊக்குவிப்பு செய்து ரசித்தால் அதன் பெயர் திணறல் என்பது காங்கிரஸ் அகராதிப்படியா?


bgm
அக் 10, 2024 08:04

தேர்தல் தோல்விக்கு முழுப்பொறுப்பு ஏற்று அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று கார்கே அடுத்த பிரதமராக அறிவிக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 05:55

ராகுல் இன்னமும் பதவியில் இருக்கத்தான் வேணுமா?


Kasimani Baskaran
அக் 10, 2024 05:44

இராகுல் ஜிலேபியை பெரிய அளவில் வாங்கி தனியாக பயிர் செய்திருப்பதாக தகவல். அடுத்த முறை தேர்தலுக்குள் அது விளைந்து நல்ல மகசூல் கொடுக்கும் என்று நம்புவதாக வணிகர் சிதம்பரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வாய்மையே வெல்லும்
அக் 10, 2024 04:31

ராவுளுக்கு அதானி அம்பானி கைப்பட செஞ்சு அனுப்பிய திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவீடு தான் சாப்பிடுவார். அம்புட்டு ஏக்கம் பயபுள்ளைக்கு அவர்களிடம் துட்டு கறக்க முடியவில்லையே என படு ஏக்கம் .. அதான் முக்கியஸ்தர்களான அவர்கள் பப்புவின் ஏசலுக்கு ஆளாகிறார்கள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 09, 2024 22:32

ராகுல் இத்தனை ஆண்டுகளாக அரசியலில் / பொதுவாழ்வில் இருக்கிறார் ..... ஜிலேபியை தொழிற்சாலை வைத்து செய்யப்படும் இனிப்புப்பண்டம் அல்ல என்பது அவருக்குத் தெரியாமல் போனது பரிதாபகரமானது ...... கோமாளித்தனமான அணுகுமுறைகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும் ..... இதுதான் சாக்கு என்று அவரை பாஜக அவமானப்படுத்த அவசியமில்லை ....


Srinivasan K
அக் 09, 2024 22:44

rahul deserves as long he is a makku


கிஜன்
அக் 09, 2024 20:55

கோவை ஜாங்கிரி ..... டில்லி ஜிலேபி .... அரசியல்வாதிகளுக்கு சுவீட் ஆகாது போல ...