உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜல்லிக்கட்டு சீசன் வந்தாச்சு; ஆன்லைனில் விண்ணப்பம்; வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு

ஜல்லிக்கட்டு சீசன் வந்தாச்சு; ஆன்லைனில் விண்ணப்பம்; வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூழலில், 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விபரம் பின்வறுமாறு:* காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.* மாவட்ட கலெக்டர் இடம், முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.* போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது.* ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் போட்டி நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.* அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழ்வேள்
டிச 24, 2024 20:04

இவர்கள் நடத்துவது ஜல்லி கோட்டே அல்ல..சுத்த மடத்தனம்....ஒரு காளையை ஒரு நேரத்தில் ஒருவீரன் அடக்க அணைய முயற்சி செய்யவேண்டும்.. அதற்கு நேர் வரையறையும் வேண்டும்... அதைவிட்டு விட்டு ஒரே காளையின் மீது ஏகப்பட்ட பேர் ஒரே நேரத்தில் பாய்ந்தால் விபத்து அதிகம் நடக்கும்...காளைக்கும் மிரட்சி அதிகமாகும்.. இவர்கள் நடத்துவது ஜல்லி கட்டின் பெயரால் சாராயம் பிரியாணி வியாபாரம் மட்டுமே.


T.sthivinayagam
டிச 24, 2024 19:37

இது ஹிந்து மத பாரம்பரிய கலாச்சாரம்


ஆரூர் ரங்
டிச 24, 2024 17:18

தெருநாயைத் துன்புறுத்தினால் தண்டனை உண்டு. ஆனால் நம்மிடம் வம்புக்கு வராத காளைகளைத் துரத்திப் பிடித்து அடக்குவதற்கு அரசே வசதி செய்து கொடுக்கிறது. அது துன்புறுத்தலில்லையா ? ஜல்லிக்கட்டு குறித்த நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பு சூப்பராக இருந்தது.


Ramalingam Shanmugam
டிச 24, 2024 16:19

peta எங்கே போனான் ?


அப்பாவி
டிச 24, 2024 15:29

ஏண்டா... ஜல்லிக்கட்டையும் ஆன்லைனிலேயே நடத்திக்கலாமே.


கண்ணன்,மேலூர்
டிச 24, 2024 16:13

முக்கியமாக கலைஞர் கருணாநிதி ஜல்லிக்கட்டு விழா என்று பெயர் வைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


ஆரூர் ரங்
டிச 24, 2024 17:19

மார்ட்டின் மூலமா?


புதிய வீடியோ