உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாத சதி முறியடிப்பு: காஷ்மீரில் 9 பேரை கொத்தாக அள்ளிய போலீசார்

பயங்கரவாத சதி முறியடிப்பு: காஷ்மீரில் 9 பேரை கொத்தாக அள்ளிய போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, 9 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்து வருகிறது. சமீபத்தில் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.

9 பேருக்கு காப்பு

இந்நிலையில், எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய, கட்டால் கிராமத்தை சேர்ந்த மன்னன் முகமது லத்தீப், அக்தர் அலி, சதாம் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தோடா, உதம்பூர் மற்றும் கதுவா மாவட்டங்களில் வசித்து வந்துள்ளனர்.

பயங்கரவாத சதி

இவர்கள் எல்லையில் பயங்கரவாதிகளுக்கு ஊடுருவி வரவும், உணவு, தங்குமிடம் கிடைக்கவும், தகவல் தரவும் உதவியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sck
ஆக 13, 2024 16:24

ஏன் கொத்தாக அள்ள வேண்டும். கொத்தாக சுட்டுத் தள்ள வேண்டாமா. இனி அவர்களிடம் ஏன் விசாரணை.


ராமகிருஷ்ணன்
ஆக 13, 2024 13:31

ஊடுவுருவும் பயங்கரவாதிகளை விட, உதவும் இந்தியர்கள் அதி பயங்கரவாதிகள் என்று கருத வேண்டும். விசாரணை இல்லாமல் உடனடியாக சுடப்பட வேண்டும்.


Ramesh Sargam
ஆக 13, 2024 13:05

பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் வேட்டையாடும் சமயங்களில், ஒரு சில வேலையில்லா நம் நாட்டு அரசியல்வாதிகளை, சுயற்சி முறையில் அந்த இடத்திற்கு அனுப்பி நமது வீரர்கள் எடுக்கும் துணிச்சலான செயல்களை பார்வையிட செய்யவேண்டும். அப்பவாவது அந்த வேலையில்லா அரசியல்வாதிகளுக்கு நாட்டுப்பற்று என்னவென்று புரிகிறதா என்று பார்க்கவேண்டும். சும்மா பாராளுமன்றத்துக்கு, சட்டசபைக்கு செல்வது, ரகளையில் ஈடுபடுவது, அங்குள்ள உணவகத்தில் ஓசி சாப்பாடு தின்பது என்று காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.


rasaa
ஆக 13, 2024 12:51

நோ அர்ரெஸ்ட்.


Anand
ஆக 13, 2024 12:18

பயங்கரவாதிகளை மட்டுமல்ல, அவனுகளுக்கு உதவும் ஈனப்பிறவிகளையும் கைது செய்யாமல் சுட்டுக்கொல்லவேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ