உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்: பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீரில் வழக்கமாக குளிர்காலங்களில் எல்லையில் ஊடுருவல் சம்பவங்கள் குறையும். ஆனால், இந்த முறை தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகப்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது. அந்த தகவல் அடிப்படையில், காஷ்மீரில் பல்வேறு பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறிடிக்க ஆப்பரேஷன் பிம்பிள் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=loy4xjw9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குப்வாராவில் ஆப்பரேஷன் பிம்பிள் ராணுவ நடவடிக்கையில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில், இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஊடுருவல் முயற்சி தொடர்பாக, உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று முதல் ஆப்பரேஷன் பிம்பிள் ராணுவ நடவடிக்கையை தொடங்கி, தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rathna
நவ 08, 2025 20:45

வருபவனை எல்லாம் கொசுக்களை போல சுட்டு வானுலக தேவதைகளிடம் அனுப்புவது தான் ஒரே வழி


நிக்கோல்தாம்சன்
நவ 08, 2025 14:16

பாகிஸ்தானின் ஆணுஆயுதங்கள் தாங்களே வெடித்து விட்டால் என்னாகும் ?


duruvasar
நவ 08, 2025 14:39

இது ஒரு நல்ல கேள்வி இது ஒரு நல்ல கேள்வி . இட் ஐஸ் எ குட் கொஸ்டின்.


Rathna
நவ 08, 2025 18:57

அது அமெரிக்காவின் கண்ட்ரோலில் இருக்கிறது. பாக்கிஸ்தான் அணு ஆயுத கட்டமைப்பை பாதுகாக்க, இந்த கட்டிட அமைப்பு அமெரிக்கா ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் கட்டி கொடுத்ததாகும். இந்தியா, ஆபரேஷன் சிந்தூரின் போது பாக்கிஸ்தான் அணு ஆயுதம் இருக்கும் பகுதிக்கு அருகில் சென்று S 400 மூலம் குண்டு வீசியது. இதனால் அந்த பகுதிக்கு அருகில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ட்ரம்பின் கோவத்திற்கு இது ஒரு காரணம். இந்த குண்டு வீச்சிற்கு பயந்து தான் பாகிஸ்தானின் காஷ்மீர் தளபதி உடனடியாக அமைதி திரும்ப வேண்டும் என்று இந்திய ராணுவ அதிகாரியிடம் மன்றாடினார்.


பேசும் தமிழன்
நவ 08, 2025 13:37

.... வந்தே மாதரம்..... ஜெய்ஹிந்த்


Ramesh Sargam
நவ 08, 2025 11:41

ஒட்டுமொத்தமா அவர்களை அழித்து நிம்மதி ஆக இருக்கவேண்டும்.


V RAMASWAMY
நவ 08, 2025 10:33

சில்லறை சில்லறையாக பயங்கரவாதிகளை நேர்கொள்வதற்குப் பதில் இனி தேவை ஓட்டுமொத்த சிந்தூர 2 பாகிஸ்தான் என்கவுண்டர். பொறுத்தது போதும் பொங்கியெழு பாரத ராணுவமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை