ஜம்மு எல்லையில் பாக்., ராணுவம் தாக்குதலா
பூஞ்ச் : ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் செக்டார் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், நம் ராணுவத்தின் துருப்புகள் மீது நேற்று காலை 11:00 மணி அளவில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு நம் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், நம் தரப்பில் எந்த தேசமும் ஏற்படவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டை பாக்., ராணுவத்தினர் நடத்தினரா அல்லது அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்து நம் நாட்டுக்குள் ஊடுருவ காத்திருந்த பயங்கரவாதிகள் நடத்தினரா என்பது தெரியவில்லை. இது குறித்து நம் ராணுவத்தினர் விசாரித்து வருகின்றனர்.