வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜம்மு காஸ்மீரில் ஒரு நாளில் தேர்தலை நடத்த முடியல. ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 1ம் தேதி நடக்க உள்ள கடைசி கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (செப்.29) நிறைவு பெற்றது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, 2 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துவிட்டது.3வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (செப்.29) மாலையுடன் முடிவடைந்தது. கடைசி நாள் என்பதால் அனைத்து முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் ஆதரவு திரட்டினர்.தேர்தல் பிரசாரம் முடிந்துவிட்ட நிலையில், 3ம் கட்ட ஓட்டுப்பதிவு அக்டோபர் 1ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. மும்முனை போட்டி நிலவும் தேர்தல் களத்தில், ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 8ம் தேதி நடைபெறுகிறது.
ஜம்மு காஸ்மீரில் ஒரு நாளில் தேர்தலை நடத்த முடியல. ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி சாத்தியம்?