உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் ஜனதா தரிசனம்?: அமைச்சர்களுடன் யோகி ஆலோசனை

மீண்டும் ஜனதா தரிசனம்?: அமைச்சர்களுடன் யோகி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் பா.ஜ. குறைந்த தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் ஜனதா தரிசனம் நடத்துவது குறித்து அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.நடந்து முடிந்த தேர்தலில் உ.பி., மாநிலத்தில் பா.ஜ., 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமஜ்வாதி 37 இடங்களிலும் காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றனஅதே நேரத்தில் 2014-ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 71 இடங்களிலும், 2019-ல் 62 இடங்களையும் பெற்றது. இந்நிலையில் தற்போது வெறும் 33 இடங்களை மட்டுமே பெற்றிருப்பது கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.இதனையடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று (08-ம் தேதி) மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெற்றி குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றியும், தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிர்வாகச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நன்னடத்தை விதி காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஜனதா தரிசனம் ( மக்கள்சந்திப்பு ) நிகழ்ச்சியை வரும் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து யோகி தினமும் காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் ஜனதா தரிசனம் ( மக்கள் சந்திப்பு) நடத்தி வந்தார்.இதன்மூலம் மக்களின் குறைகள் எளிதாக தீர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் ஜனதா தரிசனம் நிகழ்ச்சியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது மேலும் காலி பணியிடங்களில் ஆட்சேர்ப்பு முறையையும் ஆய்வு செய்தார். அப்போது மாநில காவல்துறையில் ஆட் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ayyavu Uthirasamy
ஜூன் 09, 2024 13:54

நடத்துங்க உங்க நாடகத்தை..??


சவிதா
ஜூன் 09, 2024 10:24

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது. முதலில் உங்கள் அகந்தை, ஆணவத்தை விட்டொழியுங்கள்.


GMM
ஜூன் 09, 2024 07:37

ஜனதா தரிசனம். ஓரளவு பயன் தரும். காங்கிரஸ், திமுக பல கட்சிகளுடன் ஒன்று இணைத்து வெற்றி. பண பலம். மீடியா பலம். மக்களிடம் இலவசம், இட ஒதுக்கீடு நீக்கம், அரசியல் சாசன, EVM பற்றி வதந்தியும் தான் வெற்றிக்கு காரணம். சிறுபான்மை மக்கள் திமுக, பிஜேபி அல்லாத கட்சிக்கு வாக்களித்து வருவது தெரிகிறது. கொரோணா நோய் பரவாமல் பணி, சில வளர்ச்சி பணிகளுக்கு மக்களிடம் வாக்கு பெற முடியவில்லை. பிஜேபியின் தனி வலிமை வெளிப்படுகிறது. மக்கள் எந்த உதவியும், துன்பமும் நீண்ட காலம் நினைவில் கொள்வது இல்லை? மாநில, தேசிய வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு பயன் தரும். எதிகட்சிகள் வென்றாலும் பீதியில் இருப்பது போல் தெரிகிறது.


Syed ghouse basha
ஜூன் 08, 2024 22:00

பிளவு வாத அரசியல் இனி எடுபடாது மிஸ்டர் யோகி


Nagendran,Erode
ஜூன் 09, 2024 01:54

இந்துக்கள் பெரும்பான்மை வகிக்கும் பாரத நாட்டின் அடுத்த பிரதமர் யோகிதான் நீயெல்லாம் இப்படி கதறி கொண்டே இருக்க வேண்டும்


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூன் 11, 2024 13:57

எங்க எல்லாம் மதமும் ஒன்று என சொல்லுலுங்கள் பார்க்கலாம் ?


Siva Subramaniam
ஜூன் 08, 2024 21:42

மிகவும் வரவேற்கத்தக்கது. இங்கே அப்படி ஏதும் நடக்காது, நடக்கவும் விடமாட்டார்கள். வறட்டு கௌரவம் காரணம்.


venugopal s
ஜூன் 08, 2024 21:22

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 09, 2024 00:56

திமுக அடிமைகள் செய்திகளைச் சரியாகப் படிப்பதில்லை ..... ஏற்கனவே அமலில் இருந்த திட்டம் அது .... தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தத்தாலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டம் இது .... புதிதாக அவர் தொடங்கவில்லை .....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை