உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவி விலகஐ.ஜ.த., கோரிக்கை

பிரதமர் பதவி விலகஐ.ஜ.த., கோரிக்கை

பாட்னா:'ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு, தார்மீக பொறுப்பேற்று, பிரதமரும், உள்துறை அமைச்சரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்' என, ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையின் போது, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் பெயரை, முன்னாள் அமைச்சர் ராஜா, கோர்ட்டில் தெரிவித்துள்ளார். எனவே, ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று, பிரதமரும், உள்துறை அமைச்சரும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்தது, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் முறைகேடு, ஆதர்ஷ் திட்டம் ஆகிய ஊழல்களால், காங்கிரஸ் ஆட்டம் கண்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது, கேலிக் கூத்தானது. ஊழல்களின் சங்கமமாக, காங்கிரஸ் திகழ்கிறது.இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ