உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். தற்போது ஜெய்ப்பூரில் அவர் தங்கி உள்ளார்.இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் உஷாவும் கடும் கண்டனம் தெரவித்து கொள்கிறோம். இந்த நாடு மற்றும் மக்களின் அழகையும் அன்பையும் அனுபவித்து வருகிறோம். இந்த கொடூரமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் வான்ஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பிரேம்ஜி
ஏப் 23, 2025 07:25

நானும் கண்டனம் தெரிவிக்கிறேன்! இது போதுமா?


xyzabc
ஏப் 22, 2025 23:35

Thank you sir for expressing your grief.


Bhakt
ஏப் 22, 2025 22:59

காஷ்மீரில் சந்தேகத்துகுறியவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். மக்களை இன்ஃபார்மர்களாக பயன்படுத்தி அவர்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும்.


புதிய வீடியோ