உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜே.இ.இ., தேர்வு முடிவு: முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை

ஜே.இ.இ., தேர்வு முடிவு: முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பூர் : ஜே.இ.இ.-, அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாடு முழுதும் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில் சேர பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 18ம் தேதி நடந்த தேர்வை, 1.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகளை ஐ.ஐ.டி., கான்பூர் நேற்று வெளியிட்டது. மொத்தம் 9,404 மாணவியர் உட்பட 54,378 பேர் இந்த தேர்வில் உயர் கல்விக்கு தகுதி பெற்று உள்ளனர்.ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் ஐ.ஐ.டி., டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். இவர், 360க்கு 332 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.ஐ.ஐ.டி., கரக்பூர் மண்டலத்தைச் சேர்ந்த தேவ்தத்தா மாஜ்ஹி பெண்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர், 360க்கு 312 மதிப்பெண்கள் பெற்று, பொது தரவரிசைப் பட்டியலில் 16ம் இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் இடம்பெறவில்லை. மண்டல வாரியாக, ஐ.ஐ.டி., ஹைதராபாத் அதிக எண்ணிக்கையிலான தகுதி பெற்ற மாணவர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில், 12,946 மாணவர்கள் தகுதி பெற்றனர். ஐ.ஐ.டி., டில்லி, 11,370 தகுதி பெற்ற மாணவர்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sithik
ஜூன் 03, 2025 17:41

JEE Passed persons in All state are CBSE students only.... Mostly private Coaching centre students


திருட்டு திராவிடன்
ஜூன் 03, 2025 15:28

அருமை. எல்லாம் சமச்சீர் கல்வி செய்யும் மாயாஜாலம். இன்னும் சமச்சீர் கல்வியை பயின்ற நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம்?


venugopal s
ஜூன் 03, 2025 14:53

இந்த வருடம் மட்டுமே வராத மாதிரி என்ன பேச்சு? எப்போதும் தானே வருவதில்லை!


Seekayyes
ஜூன் 03, 2025 12:26

எங்கே ஆளக்காணோம்? சங்கிகளின் சதி NEETம், JEEயும்னு சங்கு ஊதுவானுங்களே.


lana
ஜூன் 03, 2025 11:00

எங்கள் க்கு தேர்வு என்றாலே அலர்ஜி. தமிழன் படித்து முன்னேறி விட்டால் எங்கள் குடும்பம் க்கு யார் போஸ்டர் ஓட்டுவது குடை பிடிப்பார்கள். எனவே சமச்சீர் கல்வி படித்து எங்கள் கலவி தந்தை கள் நடத்தும் கல்லூரி களில் படித்து swiggy zomotto இவைகள் இல் வேலைக்கு சென்றால் போதும். இதனால் தானே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் அமைக்க விடாமல் போராட்டம் செய்கிறது. இருந்த ஒரு பெரிய ஆலை உம் விரட்டி விட்டனர். வடக்கில் சென்று வேலை செய்ய ஹிந்தி வேண்டும். அதற்கு தானே ஹிந்தி ஒழிக கோசம். ஆனால் நாங்கள் ஹிந்தி சினிமா chaanal மூலம் சம்பாதிக்க தெரியும். தமிழன் இந்த நிலை மாற இல்லை என்றால் நம் அடுத்த தலைமுறைக்கு இங்கு வேலை இருக்காது. டாஸ்மாக் கடையில் தண்ணீர் பாட்டில்கள் விற்க வேண்டும்


Seekayyes
ஜூன் 03, 2025 12:29

சூப்பர் கமெண்ட் சார். அருமை, அருமை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 08:55

அடுத்து JEE ஒழிப்போம்..... அதன் ரகசியம் எங்களுக்கு தெரியும்....அடுத்த தேர்தல் அஜெண்டா ரெடி....!!!


D Natarajan
ஜூன் 03, 2025 07:59

தமிழக மாணவர்கள் அறிவாளிகள். ஆனால் அரசியல்வாதிகள் அறிவுகெட்ட ஜென்மங்கள். பாட திட்டங்களை மாற்ற வேண்டும். அதற்க்கு ஆட்சி மாற்றம் தேவை


இறைவி
ஜூன் 03, 2025 07:48

இம்மாதிரி இந்திய அளவில் நடக்கும் போட்டித் தேர்வுகள்தான் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வித்தரத்தை முழுமையாக வெளிக்கொணரும். இன்னமும் குறிப்பிட்டு சொன்னால், இந்தியா முழுவதுமாக தேர்வு பெற்றுள்ளவர்கள் 54,378 பேரில், தமிழகத்திலிருந்து தேர்வு பெற்றவர்கள் முழுவதுமாக CBSE பாட திட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். நாங்கள் கல்வி தரத்தில் முன் நிற்கிறோம் என்று வெற்றிக்கு மார் தட்டும் இந்த திராவிட மாடல் அரசு, அரசு பள்ளிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக வெளியிட்டும். பின்னர் அவர்கள் சொல்வதை நம்புவோம். இதே நிலைதான் அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்து போட்டி தேர்வுகளிலும், அரசு பள்ளி மாணவர்களின் வெற்றி விகிதம்.


மீனவ நண்பன்
ஜூன் 03, 2025 04:07

மோதியின் சதி என்று உருட்ட வருவார்களே ?