உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறகுகள் முறிந்த ஜெட் ஏர்வேஸ்; சிறு முதலீட்டாளர்களின் கதி?

சிறகுகள் முறிந்த ஜெட் ஏர்வேஸ்; சிறு முதலீட்டாளர்களின் கதி?

புதுடில்லி: கைவிடப்பட்ட தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் சொத்துக்களை விற்று, கடன்களை அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு விமான சேவையை நிறுத்தியது. கடன் சுமை 7,500 கோடியை தொட்ட நிலையில், கடனளித்த வங்கிகள், நிறுவனங்கள், தங்களுக்கு சேர வேண்டிய நிலுவையை செலுத்தக் கோரி அழுத்தம் தந்த நிலையில், இது குறித்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முராரி லால் ஜலான் என்பவரின் ஜே.கே.சி., நிறுவனம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 'கல்ராக் கேப்பிடல்' நிறுவனம் ஆகியவை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்த முன்வந்த நிலையில், அதை ஏற்று, 2021ல் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஆனால், ஆண்டுகள் கழிந்தும், 350 கோடி ரூபாய் நிலுவையை திரும்பச் செலுத்தவும்; வங்கி உத்தரவாதங்களை பெற்றுத் தரவும் அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து கடன் வழங்கிய வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. ஜே.கே.சி., நிறுவனத்துக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவன உரிமையை மாற்றுவதற்கான தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் அனுமதியை ரத்து செய்த நீதிமன்றம், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, கடன் வழங்கிய வங்கிகள், நிறுவனங்களுக்கு செலுத்த உத்தரவிட்டது. அரசியல் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.2010- குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் போட்டியால், நிதி நெருக்கடி.2019- ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல், சேவை முடங்கியது.2021- வேறு முதலீட்டாளர்களுக்கு உரிமை மாற்றிக் கொள்ள, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் அனுமதி.2023- மீட்பு நடவடிக்கை ஸ்தம்பித்ததால், தீர்ப்பாய அனுமதியை எதிர்த்து வங்கிகள் வழக்கு2024- சொத்துக்களை விற்று கடனை அடைக்க நீதிமன்றம் தீர்ப்பு.

சிறு முதலீட்டாளர்களின் கதி?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், மொத்தம் 1.43 லட்சம் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வைத்துள்ளனர். நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டு கடன்கள் அடைக்கப்பட உள்ளதால், தங்களது முதலீடு என்னாகும் எனத் தெரியாமல் இவர்கள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rpalnivelu
நவ 08, 2024 15:29

கேடி ப்ரோத்ர்சின் ஜெட் ஏர்வேஸ் என்னானது?


Sankare Eswar
நவ 08, 2024 13:11

நல்ல சேவையை வழங்கிய நிறுவனம்


ஆரூர் ரங்
நவ 08, 2024 09:26

ராபர்ட் வதேரா வாய் திறக்கவில்லை.


user name
நவ 08, 2024 14:10

நான் கடைசியாக துபாய்லிருந்து கான்செல் செய்து விட்டு 2011 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் இல் தான் வூருக்கு வந்தேன், ஜெட் ஏர்வேஸ் ம் கடனில் மூழ்கியது , நானும் கடனில் மூழ்கி தத்தளிக்கிறேன்


புதிய வீடியோ