உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

சர்க்கார் உத்தியோகம், போடுங்க ஒரு சல்யூட்! திருநங்கைக்கு வாய்ப்பு தந்த ஜார்க்கண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில், அரசு வேலையில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுகள் குவிகின்றன.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அவர்கள் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டின் பலன்களை பெறமுடியும். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் தற்போது மாநிலத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் அரசு பணியில் சேர்ந்துள்ளார்.மேற்கு சிங்புங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமிர் மகதோ. சம்பல்புர் கிராமத்தில் செவிலியர் பயிற்சியை நிறைவு செய்தார். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செவிலியர் பயிற்சி பூர்த்தி செய்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமிர் மகதோவுடன் சேர்த்து மொத்தம் 365 பேர் பயிற்சியை நிறைவு செய்து அரசு பணிக்கு தேர்வாகி இருக்கின்றனர். அனைவருக்குமான பணி ஆணையை முதல்வர் ஹேமந்த் சோரன் வழங்கி உள்ளார். இது குறித்து அமிர் மகதோ கூறி உள்ளதாவது; எனது தாய்க்கு செவிலியராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால் பொருளாதாரம், குடும்பச்சூழல் காரணமாக அவரது லட்சியம் கனவாகவே போனது. எனவே என்னை செவிலியராக பணியில் அமர்த்த வேண்டும் என்று எண்ணினார். அவரது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.நான் தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறையில் சேர்ந்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மிக்க நன்றி என்று கூறி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசின் இத்தகைய நடவடிக்கையை பலரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரதி
செப் 03, 2024 10:12

நன்று. திருநங்கையர் நம்பிக்கைக்கு உரியவர்கள். முக்கிய ரகசியப் பாதுகாப்பு துறைகளில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.


அப்பாவி
ஆக 31, 2024 10:56

அவர் தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்ந்திருந்தால் வரவேற்கத் தக்கது. மத்தபடி திருநங்கை கோட்டா மாதிரி குடுத்திருந்தால் அதை விட கேவலம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை