உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: காஷ்மீர் சட்டசபையில் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது அரசியலமைப்பு சட்டப் பிரிவு, 2010ல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு - காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியைப் பிடித்தது.இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்குப் பின், சட்டசபைக் கூட்டத்தொடர் துவங்கியது. கூட்டத்தொடர் துவங்கியதும், தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் ரஹீம் ராத்தர், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (நவ.,06) ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும், இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இதில் திருப்தியடையாத பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதையடுத்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கடும் அமளிக்கு மத்தியில் சட்டசபையில் மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Parasumanna Sokkaiyer Kannan
நவ 07, 2024 10:00

There should not be any special status to any state. Nehru did so many blunders and this issue one among them. India should be india.


Ravishankar B
நவ 07, 2024 09:07

என்ன பாகிஸ்தானின் கைக்கூலிகள் திருட்டு முன்னேற்ற கழகத்தின் குண்டர்கள்


Ravishankar B
நவ 07, 2024 09:07

எல்லாம் பாகிஸ்தானும் திருட்டு முன்னேற்ற கழகத்தின் கூட்டமைப்பும் உள்ள குண்டர்களும்


Ms Mahadevan Mahadevan
நவ 06, 2024 20:02

இந்த காதில் வாங்கி அடுத்த காது வழியாக விட்டு விடுங்கள். ஓநாய்கள் ஓலம் இடத்தான் செய்யும் . அதேர்க்கெல்லம் பயப்பட தேவையில்லை. இந்த மாதிரி தீர்மானங்களை நடுவண் அரசு புறந்தள்ள வேண்டும்


Rajasekar Jayaraman
நவ 06, 2024 19:51

நீ என்னதான் தலைகீழாக நின்றாலும் பாகிஸ்தான் ஆதரவாளர் ஆட்சிக்கு சிறப்பும் கிடையாது அந்தஸ்தும் கிடையாது.


Sree
நவ 06, 2024 19:43

இந்த எழவுக்குத்தான் தேர்தல் தேவை இல்லை என தேர்தலுக்கு முன்பே எழுதி இருந்தேன் .மீண்டும் நமது வரிப்பணம் இந்த இழிபிறவிக்குத்தான் போய் சேரும் போல...


Venkatesan Srinivasan
நவ 06, 2024 19:01

வேண்டுமானால் கடந்த 75 வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பண்டிட் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தமாக அங்கு உள்ள சட்டமில்லா சபைக்கு பிரத்யேக சலுகையாக அந்த யூனியன் பிரதேசத்தில் இந்திய இராணுவ அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு ஆட்சி அதிகாரத்தில் வைக்க வேண்டும். சராசரி மற்ற ஏனைய மாநில, யூனியன் பிரதேச சட்டசபை, முதலமைச்சரை காட்டிலும் அதிகார பலம் குறைத்து இந்திய அரசின், இராணுவ அதிகாரத்தின் கீழ் மாநில காவல் சட்ட ஒழுங்கை குறைந்தது அடுத்த 75 ஆண்டுகளுக்கு வைக்க வேண்டும்.


muthu
நவ 06, 2024 18:34

By getting special status JK what benefit will get


sankaranarayanan
நவ 06, 2024 18:30

பாராளுமன்றத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றியபின் இதை திரும்பவும் மாநிலம் எடுப்பது சட்டத்திற்கு முரணானது என்றே உச்சநீதி மன்றம் அறிவிக்க வேண்டும் மேலும் இப்படி செய்வதால் நாட்டின் ஸ்திரத்தன்மை கெடும் அதற்கு தகுந்த நடவடிக்கை மத்திய அரசு எடுக்கலாம் என்றே தீர்ப்பு கூறினால்தான் இது மற்ற மாநிலங்களுக்கும் பரவாது இது கோவிட்டை விட கொடுமையானது.


Kundalakesi
நவ 06, 2024 18:30

அனைத்தையும் நேர் வழியில் அடைய முடியாது. இவர்களை அடக்க இவர்கள் வழியைத்தான் பின்பற்ற வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை