உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜே.எம்.எம்., கட்சிக்கு சம்பாய் சோரன் ‛குட்பை

ஜே.எம்.எம்., கட்சிக்கு சம்பாய் சோரன் ‛குட்பை

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் அக்கட்சியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qxra9x5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.கடந்த ஜூனில் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார் . பின் சம்பாய் சோரன் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின.இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை , பிர்சாமுண்டா விமான நிலையத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகுவதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்தில் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 30-ல் பா.ஜ.,வில் இணைய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mannan
ஆக 28, 2024 22:41

இவர் யார் என்று இங்கே யாருக்காவது தெரியுமா. ஏன் சார் தேவையில்லாம வாசகர்கள் நேரத்தை விரயம் செய்கிறீர்கள்.


Gnana Subramani
ஆக 28, 2024 22:41

2014 இல் இருந்து இது வரை பிஜேபி உடைத்த கட்சிகள் எத்தனை. குடும்பங்கள் எத்தனை


அன்புவேல்
ஆக 28, 2024 21:48

போங்க... போங்க. பா.ஜ வில் சேர்ந்து முதல்வராகி உங்க பங்குக்கு ஆட்டையப் போடுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை