உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் சேருங்களேன்!

பா.ஜ.,வில் சேருங்களேன்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பா.ஜ.,வில் சேர வேண்டும். அவரது வருகை, எங்களது கட்சியை பலப்படுத்தும். தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனும் பா.ஜ.,வில் இணைய வேண்டும். தேச பக்தர்கள் நிறைந்த பா.ஜ.,வில் ஹேமந்த் சோரன் இணைய வேண்டும். ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

கூட்டணி சேர தயார்!

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதை திரும்ப அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் கொள்கை. இதை காங்கிரசும் ஏற்றுக் கொண்டால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயார்.மெஹபூபா முப்தி, தலைவர்,மக்கள் ஜனநாயக கட்சி

திட்டமிட்ட சதி!

அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறப் போவதாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, சில ஊடகங்கள் திட்டமிட்டு வதந்தியை பரப்புகின்றன. இது திட்டமிட்ட சதி. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. மாயாவதி, தலைவர்,பகுஜன் சமாஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை