உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை

புதுடில்லி: வீட்டில் சட்டவிரோதமாக பணக்குவியல்களை மறைத்து வைத்த விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து வந்த தகவலின் பேரில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்ட போது, பாதி எரிந்த நிலையில், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மூட்டைகளில் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான புகார்களை யஷ்வந்த் வர்மா மறுத்தார். இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து, அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும்படி, யஷ்வந்த் வர்மாவை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. ஆனால் முரண்டு பிடித்தார். அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரைத்தது. ஆனால், பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கவில்லை. அதேவேளையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில், யஷ்வ்ந்த் வர்மாவை பணிநீக்கம் செய்யுமாறு, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரையில் கூறியிருப்பதாவது; நீதிபதி யஷ்வந்த் குற்றம் புரிந்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அவரது வீட்டில் பணக் கட்டுகள் இருந்ததற்கான சாட்சிகளும், வீடியோ ஆதாரங்களும் உள்ளன. மொத்தம் நீதிபதியின் மகள், தீயணைப்பு வீரர்கள், போலீஸார் என மொத்தம் 55 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டது. அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளன.'என்னுடைய வாழ்நாளில் இவ்வளவு ரூபாய் நோட்டுக்களை நான் பார்த்ததே இல்லை,' என்று சாட்சியம் அளித்த ஒருவர் கூறியுள்ளார். நீதிபதியின் தனி செயலாளர் ஒருவர் பணம் குறித்து ஏதும் சொல்லக் கூடாது என்று தீயணைப்பு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். மேலும் விசாரணை குழு ஆய்வு செய்வதற்கு முன்பாக அவரது குடும்பத்தினரால், தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்த ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டு விட்டன. ரூபாய் நோட்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸிடமோ அல்லது தலைமை நீதிபதியிடமோ புகார் அளிக்காதது ஏன்?நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை இயற்கைக்கு மாறாக இருந்துள்ளது. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இவ்வாறு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

vns
ஜூன் 20, 2025 12:30

அர்ரெஸ்ட் எப்போ ?


JaiRam
ஜூன் 19, 2025 21:10

பணி நீக்கம் செய்வதோடு கைது செய்யப்பட்டு லஞ்சம் வாங்கிய விவரங்களை விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும்


சிட்டுக்குருவி
ஜூன் 19, 2025 20:58

இதோ ஏதோ ஒருதுரதிஷ்டமான ஒரே ஒரு நிகழ்வாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. நாட்டின் தலைநகரில் ஒன்றோ அல்லது ஒன்றுக்குமேற்பட்ட லஞ்ச லாபிகள் இருப்பதற்காண அறிகுறியே .இதை தீவிரமாக எடுத்து பலமுனை விசாரணை செய்து வெளிக்கொணரவேண்டும் .கங்கையை சுத்தம்செய்ததுபோல டில்லியை சுத்தம் செய்யவேண்டிய தருணம் இது .


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2025 20:41

பிஜேபி ஆட்சியில் நீதிபதி ஊழல் செய்தாலும், சிறைக்கு போகவேண்டியது தான் என்பதற்கான சரியான நேர்மையான நியாயமான ஊழலற்ற ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரு பெரிய படிப்பினையாக இருக்கும். ஊழல் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை இணங்கி செயல்படுத்த உதவும்.


J.Isaac
ஜூன் 19, 2025 20:49

பணம் எப்படி வந்தது என்பது மட்டும் இதுவரை வெளிவரவில்லையே ஏன் ?


c.mohanraj raj
ஜூன் 19, 2025 18:39

எவனாக இருந்தாலும் ஊழல் செய்தால் பிடித்து உள்ளே போட வேண்டும் 100 கோடி என்பது இவர்களுக்கு சாதாரணமாக போய்விட்டதா வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று இலவச அரிசியை கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்டில் இந்த நீதிபதிகள் தேவையில்லை தொங்கவிட்டு விடலாம்


Indhuindian
ஜூன் 19, 2025 17:50

Dismissal is not the right punishment. As days pass by people would forget the entire episode. He should be impeached as per the provisions of law and the impeachment would be etched in history of Indian judiciary for ever.


Madras Madra
ஜூன் 19, 2025 17:44

பல நீதிகள் பணம் குடுத்து வாங்க பட்டிருக்கிறது அம்பலம் இந்த பணம் எந்த வழக்குக்கோ தெரியவில்லை குற்றவாளிகள் கொலை காரர்கள் தீவிரவாதிகள் தேச துரோகிகள் இப்படி சகலரும் இந்த சேவை யை பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது


GMM
ஜூன் 19, 2025 17:21

மத்திய அரசின் பிஜேபி மந்திரி சபையில் ஊழல் குறைவு அல்லது இல்லை என்று கூறலாம். ஆனால், பிஜேபி ஆண்ட காலங்களில் நீதிமன்றத்தில் நீதிபதி, வழக்கறிஞர் மத்தியில் உச்ச கட்ட ஊழல், சட்ட விதி மீறல்? வர்மா ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதனை சரிசெய்யவில்லை என்றால் பிஜேபியின் வரலாற்றில் கரும்புள்ளியை மறைக்க முடியாது.


theruvasagan
ஜூன் 19, 2025 17:08

பணி நீக்கம் என்கிற தண்டனை போதுமா. ஊழல் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கித் தர வேண்டாமா. அநியாயமாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டாமா. பணி நீ்


சிவம்
ஜூன் 19, 2025 16:35

முன்னாள் நீதிபதி கர்ணன் நீதி துறையில் நடக்கும் அவலங்களை ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே சுட்டிக்காட்டியிருந்தார். அப்போதே அது பற்றி ஆராய்ந்திருக்க வேண்டாமா!.


J.Isaac
ஜூன் 19, 2025 20:51

கர்ணன் என்ன ஆனார் ? அது தான் நம் நாட்டின் நேர்மை


முக்கிய வீடியோ